அவதூறு பேச்சு: எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு - ஆர்.எஸ்.பாரதி அறிவிப்பு

முதலமைச்சர் மீதும், தி.மு.க ஆட்சி மீதும், அமைச்சர்கள் மீதும் அவதூறு பேச்சு எடப்பாடி பழனிசாமி
ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், முதலமைச்சர் மீதும், தி.மு.க ஆட்சி மீதும், அமைச்சர்கள் மீதும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், செந்தில் பாலாஜி அமைச்சர் என்றும் பாராமல் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தியுள்ளனர். செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை மனிதநேயத்துடன் நடந்து கொள்ளவில்லை.

மாரடைப்பு என்பது யாருக்கு வேண்டும் என்றாலும், எப்போது வேண்டும் என்றாலும் வரும். அது ஒவ்வொருவரின் உடல் நிலையைப் பொருத்தது. இதுகூடத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக எப்படி இருந்தார் என எங்களுக்கு தெரியவில்லை.

உடல் நலம் பாதித்த நபரை ஆறுதல் கூறுவதற்காகவும், நலம் விசாரிப்பதற்காகவும், மருத்துவமனைக்கு முதலமைச்சர் சென்று பார்த்ததில் என்ன தவறு? அன்று திகார் சிறைக்கு சென்று கனிமொழியை இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் டி.ஆர். பாலு உள்ளிட்டோர் சந்தித்தனர். செந்தில் பாலாஜி மீதான குற்றம் நிரூப்பிக்கப்பட்டால்தான் அவர் குற்றவாளி.

செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுத்திருந்தாலும், அவர் மீதான பழைய வழக்குகளை தி.மு.க வாபஸ் பெறவில்லை. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது.

அ.தி.மு.க ஆட்சியில் நடந்த முறைகேடு புகாரில் தான். பதவிக்காக ஒரு பேச்சும், பதவிக்கு வந்த பின்னர் வேறு பேச்சு பேசுவது எங்கள் நிலைப்பாடு அல்ல.

எனவே, முதலமைச்சர் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com