அரசியல்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2021 சட்டப்பேரவை தேர்தலின் போது வேட்புமனுவில் சொத்துமதிப்பை குறைத்துக் காட்டியதாக மிலானி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது வேட்பு மனுவில் எடப்பாடி பழனிச்சாமி தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் 125 ஏ (1), 125 ஏ(I) 125 ஏ (ll) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனச் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.