ம.நீ.ம கட்சி போராட்டத்தில் நிர்வாகிகள் மோதல் - நடந்தது என்ன?

ஆர்ப்பாட்டத்தில் "காளி" வேடம் அணிந்து கட்சியினர் போராட்டத்தில் பங்கெடுத்தனர்
ம.நீ.ம கட்சி போராட்டத்தில் நிர்வாகிகள் மோதல் - நடந்தது என்ன?

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று மநீம கட்சியின் இளைஞரணி செயலாளர் சினேகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மணிப்பூர் வன்முறை சம்பவத்திற்க்கு எதிராக நாடுமுழுவதும் அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள் என பலரும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த வலியுறுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், மதுரை பெத்தானியபுரம்பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த வேண்டும் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காளி வேடம் அணிந்து கட்சியினர் போராட்டத்தில் பங்கெடுத்தனர். மேலும், அக்கட்சியின் மாநில இளைஞர்அணி செயலாளர் சினேகன் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அவர் பேசும்போது; தொடர்ந்து மணிப்பூரில் நீண்ட காலமாகவே இதுபோன்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்று வருகிறது என்று கூறிய அம்மாநில முதல்வரின் பேச்சு கண்டனத்துக்குரியது. எனவே, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று பேசினார்.

இதனிடையே, கட்சி நிர்வாகிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோது திடீரென போலீசாருடன் வாக்குவாதம் செய்து தாக்க முயன்றதால் அங்கே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com