தமிழகத்தில் முக்கியத் துறைகளின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம் ஐ.ஏ.எஸ் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேப்போல, முதலமைச்சரின் முதன்மைச்செயலாளராக இருந்த உதயச்சந்திரன் தற்போது நிதித்துறைச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன், பொதுப்பணித்துறை செயலாளராகவும், உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, போக்குவரத்துத்துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சுகாதாரத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்துத்துறை செயலாளர் கோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பள்ளி கல்வித்துறை செயலாளராக இருந்த நந்தகுமார் மனிதவள மேலாண்மைத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேப்போல, மேலும் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.