செங்கல்பட்டு: விஷ சாராயம் விற்பனை செய்த பா.ஜ.க நிர்வாகி - சிக்கியது எப்படி?

இந்த வழக்கில் பா.ஜ.க. ஓ.பி.சி அணியைச் சேர்ந்த செங்கல்பட்டு தெற்கு மாவட்டத் தலைவர் விளம்பூர் விஜயகுமார் தலைமறைவாக இருந்துள்ளார் என தகவல்
விளம்பூர் விஜயகுமார்
விளம்பூர் விஜயகுமார்

செங்கல்பட்டு விஷ சாராயத்தை விற்பனை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பா.ஜ.க. ஓ.பி.சி அணி தலைவர் விளம்பூர் விஜயகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தைச் சேர்ந்த சங்கர் (50). தரணிவேல் (50). மண்ணாங்கட்டி (47). சந்திரன் (65). சுரேஷ் (65). மண்ணாங்கட்டி (55) ஆகியோர் விஷ சாராயம் வாங்கி குடித்தால், உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.

இதனால், அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, நேற்று இரவு சங்கர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, சுரேஷ், தரணிவேல் ஆகிய 2 பேர் இன்று உயிரிழந்தனர்.

அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம், பெருங்கரணை கிராமத்தைச் சேர்ந்த வசந்தா (50), செல்வம் (35) மற்றும் வள்ளியப்பன் (60) உள்ளிட்டோர் விஷ சாராயம் அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில், இவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், சிலர் உயிரிழக்க, ஆக மொத்தம் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

இதனால், இச்சம்பவம் நடைபெற்ற காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான அமாவாசை, அவரது கூட்டாளிகள் சந்துரு, வேலு, ராஜேஷ் மற்றும் நரேஷ் ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த வழக்கில் பா.ஜ.க. ஓ.பி.சி அணியைச் சேர்ந்த செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் விளம்பூர் விஜயகுமார் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால், அவர் தலைமறைவானார். இந்த நிலையில், விளம்பூர் விஜயகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com