காவிரி நதிநீர் விவகாரத்தில், தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதில் கர்நாடாக மாநில அரசு தயக்கம் காட்டி வருகிறது. மேலும், மேகதாட்டு அணை கட்டுவதில் உறுதியாக உள்ளது. இதனை அம்மாநில நீர்பாசன அமைச்சர் சிவக்குமார் உறுதி செய்துள்ளார்.
இந்த நிலையில், இது தொடர்பாக சமூக வலைதள பக்கமான ட்விட்டர் மூலம், முன்னாள் தி.மு.க பிரமுகரும், பிரபல வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், 'திராவிட பெருவெளியில் முதல்வர் ஸ்டாலின் அவருடைய அருமை சகோதரர்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல், சித்தராமையா மூலம் பேசி எளிதாக இவற்றை தீர்ப்பார்…
நேற்று வரை செந்தில் பாலாஜி ஊழல் செய்தவர் என சொன்ன முதல்வர், அவரை உத்தமராக ஆக்கி மந்திரியும் பதவியும் கொடுத்து wonders செய்யும் ஸ்டாலின்;
காவேரி, மேகேதாட்,தென் பெண்னையாறு என நீண்ட கால சிக்கல்களை உடனே தீர்த்து அற்புதங்களை செய்வார் ஸ்டாலின். இது அவருக்கு சிக்கலே இல்லை. ஸ்டாலின் சொல்வதை செய்ய சோனியா- ராகுல் உள்ளனர்.
எனவே, கார்நாடக தண்ணீர் தமிழக டெல்டாவுக்கு வர ஸ்டாலினின் விடியல் திராவிட மாடல் ஒரு நொடியில் சாதிக்கும்.
அதை போலவே, கேரளா நதிநீர் பிரச்சனைகளை ஸ்டாலினின் மற்ற ஒரு சகோதரர் பினராய் விஜயனும் தீர்க்க தாயராகி விட்டார். பிறகு என்ன தமிழ்நாட்டிற்க்கு…
ஸ்டாலின் என்ற மகா சக்தி இருக்கும் நாம் ஏன் வருத்தமடைய வேண்டும்?' என கேள்வி எழுப்பியுள்ளார்.