பா.ஜ.க அள்ளிய ரூ. 5,271 கோடி - சர்ச்சையில் தேர்தல் பத்திரங்கள்

பா.ஜ.க
பா.ஜ.க

தேசிய கட்சியான பா.ஜ.கவிற்கு ரூ. 5,271 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு மத்திய பா.ஜ.க அரசு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. அங்கீகரிக்கப்பட்ட வங்கி கிளைகளில், ஆயிரம் ரூபாய் முதல் பல கோடி ரூபாய் வரை தேர்தல் பத்திரங்கள் கிடைக்கும்.

இந்த பத்திரங்களை, தனி நபர்கள் அல்லது கார்ப்பரேட் நிறுனங்கள் போன்றவை தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கலாம். ஒருவர் எத்தனை தேர்தல் பத்திரம் வேண்டும் என்றாலும் பெறலாம்.

முன்னர், அரசியல் கட்சிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நிதி வழங்கியவர் பெயர் மற்றும் வழங்கிய தொகை குறித்து ஆண்டு இறுதியில் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று விதி இருந்தது.

கடந்த 2018-ம் ஆண்டு மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு இந்த விதிகளில் திருத்தம் கொண்டு வந்தது. அதில், தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகளுக்கு நிதி வழங்குபவரின் பெயர்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கத் தேவையில்லை என மாற்றியது. இதனால், எந்த கட்சிக்கு யார்யார் எவ்வளவு பணம் நன்கொடையாக கொடுக்கிறார்கள் என யாருக்கும் தெரியாது. அந்த அளவு ரகசியமாக மாற்றப்பட்டது.

இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 5271.9751 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க பெற்றுள்ளது. இது மற்ற கட்சிக விட 3 மடங்கு அதிகம் என ஒரு பிரபல தனியார் அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தேர்தல் பத்திரத்தில் பா.ஜ.க அரசு கொண்டு வந்த விதிமுறை மாற்றம் காரணமாக, ஒரு அரசியல் கட்சிக்கு யார்யார் எவ்வளவு நன்கொடை கொடுக்கிறார்கள் என யாருக்கும் தெரியாது. அது குறித்து கேள்வியும் எழுப்ப முடியாது. இந்த நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதால் சர்ச்சை வெடித்துள்ளது. இது தொடர்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பி வருகிறன.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com