'அசாமில் கொடிகட்டி பறந்து வரும் "லவ் ஜிகாத்"தை தடுத்த நிறுத்த வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. அதற்காக நாங்கள் இரவு- பகல் பாராமல் பணியாற்றி வருகிறோம். இதற்காக, வரும் காலங்களில் 300 மதரஸாக்களை மூட உள்ளோம்' என முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் நிகழ்ச்சி ஒன்றில், முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், 'அசாமில் லவ் ஜிகாத்தை தடுத்த நிறுத்த வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. அதற்காக நாங்கள் இரவு- பகல் பாராமல் பணியாற்றி வருகிறோம்.
இதனால், அசாமில் மதரஸாக்களை மூடுவதற்குரிய சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. நான் முதல்வராக ஆன பிறகு, அசாமில் இதுவரை 600 மதரஸாக்களை மூடியுள்ளேன். இந்த ஆண்டு, அதாவது வரும் காலங்களில், மேலும் 300 மதரஸாக்களை மூட உள்ளோம்' என்றார்.
முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.