"என் மண், என் மக்கள்" யாத்திரை எதற்காக? முழு விவரம்

"என் மண், என் மக்கள்" யாத்திரை மொத்தம் 1,700 கிலோ மீட்டர் கால்நடையாகவும், 900 கிலோ மீட்டர் வாகனத்திலும் நடைபெறுகிறது.
தயார் நிலையில் யாத்திரை வாகனம்
தயார் நிலையில் யாத்திரை வாகனம்

மோடியை 3-வது முறையாக பிரதமராக்க தமிழக மக்களின் ஆதரவை பெறும் நோக்கத்தில் "என் மண், என் மக்கள் யாத்திரை" நடத்தப்படுகிறது.

ராமேஸ்வரத்தில் "என் மண், என் மக்கள்" யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைக்கிறார். யாத்திரை தொடக்க விழாவில் மோடி என்ன செய்தார்? என்ற புத்தகம் வெளியிடப்பட உள்ளது.

ஜூலை 29-ம் தேதி "என் மண், என் மக்கள்" யாத்திரை தொடங்கும். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் 'என் மண், என் மக்கள் யாத்திரை செல்ல உள்ளது.

ஆகஸ்ட் 22 வரை நடைபெறும் முதல் கட்ட யாத்திரை நடைபெறும். இதில், பா.ஜ.க முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு, யாத்திரைக்கு தலைமை வகிக்க உள்ளனர்.

மொத்தம் 5 கட்டங்களாக 168 நாட்கள் "என் மண், என் மக்கள்" யாத்திரை நடைபெறும். மக்கள் வசிக்கும் பகுதிகளில் கால் நடையாகவும், மக்கள் வசிக்காத பகுதிகளில் வாகனத்திலும் யாத்திரை நடைபெறுகிறது. இதில், மொத்தம் 1,700 கிலோ மீட்டர் கால் நடையாகவும், 900 கிலோ மீட்டர் வாகனத்திலும் யாத்திரை நடைபெறுகிறது.

ஜனவரி 11-ம் தேதிக்கு முன்பு, "என் மண், என் மக்கள்" யாத்திரை நிறைவுபெறும். யாத்திரை நிறைவு நாள் அன்று 10 இடங்களில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள்.

என் மண், என் மக்கள் யாத்திரை தொடக்க விழாவுக்கு பா.ஜ.க கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொள்கிறார். மேலும், பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின் திட்டங்கள் குறித்து கையேடு வெளியிடப்பட உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராமேஸ்வரம் வருகையை முன்னிட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com