அதிமுக குப்பை; பா.ஜ.க விஷ பாம்பு- தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

2024 தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களையும் துரத்த வேண்டும்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் அ.தி.மு.க கட்சியை ஒழித்தால் தான், பா.ஜ.கவை ஒழிக்க முடியும் என தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் வடக்கு - மத்திய - தெற்கு திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் பொதுக்கூட்டம் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தஞ்சை திலகர் திடலில் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் குட்டி கதை கூறினார்.

அதில், "வீட்டிற்கு அடிக்கடி விஷ பாம்பு வந்து கொண்டு இருந்தது‌. அதனை அடித்து வெளியே போட்டாலும், மீண்டும் மீண்டும் வீட்டிற்குள் வந்தது. வீட்டிற்கு வெளியே வந்த பார்த்தபோது தான் குப்பை இருந்துள்ளது. குப்பைக்குள் ஒளிந்து கொண்டு தான் பாம்பு வீட்டிற்குள் வந்துள்ளது.

குப்பையை ஒழித்தால் தான் பாம்பை ஒழிக்க முடியும். அதேபோல் வீடு என்பது தமிழ்நாடு. குப்பை என்பது அ.தி.மு.க. விஷ பாம்பு பா.ஜ.க.எனவே அதிமுக என்ற குப்பையை ஒழித்தால் தான் விஷ பாம்பு என்ற பா.ஜ.கவை ஒழிக்க முடியும்.

2021 தேர்தலில் தமிழகத்தில் இருந்த அடிமைகளை தூரத்தி அடித்தது போல், 2024 தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களையும் துரத்த வேண்டும் என பேசினார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com