அரசியல்
தமிழகத்தில் இந்தியை திணிப்பது திமுகதான்.. எச்.ராஜா சுளீர்…
தமிழகத்தில் இந்தியை திணிப்பது திமுகதான்.. எச்.ராஜா சுளீர்…
தமிழகத்தில் இந்தியை திணிப்பது திமுகதான் என பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தி மொழி குறித்து அமீத்ஷாவின் கருத்துக்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தில் இந்தியை திணிப்பது திமுகதான் என பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருக்கோவிலூரில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, தமிழகத்தில் திமுகதான் இந்தியை திணிக்கிறது. அது பாஜகவின் நோக்கம் அல்ல அன்றும்,
இந்தி திணிப்பு குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் மு.க.ஸ்டாலின், திமுக தரப்பினர் நடத்தி வரும் 43 சிபிஎஸ்சி பள்ளிகளில் ஏன் இந்தியை பாடமாக நடத்துகிறார்கள் என கேள்வி எழுப்பினார். அதனால் தமிழகத்தில் திமுகவினர் நடத்தும் பள்ளிகளுக்கு முன் போராட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.