மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வி ஏற்பட்டுள்ளது என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வி ஏற்பட்டுள்ளது என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்தக் கூட்டணி பெரும் தோல்வி அடைந்த நிலையில், இரு தரப்பினரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பாஜக போட்டியிட்ட தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் குறைவாக இருப்பதாகவும், அதிமுக போட்டியிட்ட தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள பாஜக தரப்பினர், ஆளும் அதிமுக எதிர்ப்பு அலையால் தோல்வி என அவர்களின் ஆதரவாளர்களின் மூலம் கருத்துகளை வெளியிட்டனர். இதற்கு அதிமுக தரப்பில் மறுப்பு தெரிவித்தனர்.
இந் நிலையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதி திருச்சிற்றம்பலத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம்,
மத்தியில் யார் ஆள வேண்டும் என தமிழக மக்கள் தெளிவாக தீர்ப்பளித்துள்ளனர். அதேசமயம், பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், சிறுபான்மை வாக்குகள் நமக்கு கிடைக்க வில்லை. அதனால்தான் நமக்கு தோல்வி கிடைத்துள்ளது என்றார். அமைச்சரின் பேச்சு அதிமுக- பாஜக கூட்டணியின் விரிசலுக்கு ஆரம்பம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்