நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சக்கரா நகர் ராஜாஜி தெருவில் குடியிருப்பவர் டயர் மணி. இவர் பரமத்தி வேலூரில் டயர் கடை வைத்துள்ளார்.
இவரது வீட்டிற்கு நேற்று மாலை 12 பேர் கொண்ட மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். அவருக்கு கரூர் -சேலம் சொந்தமான பழைய பைபாஸ் சாலையில் உள்ள அலுவலகத்திலும் சோதனை செய்தனர். இவர் பழைய பைபாஸ் சாலையில் இந்தியன் வங்கி அருகில் டயர் கடை வைத்து நடத்தி வந்தார்.
தற்போது, மணி உடல்நிலை குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். அமலாக்கத்துறை அதிகாரிகள் 12 பேர் கொண்ட குழுவினர் அவரது வீட்டிலும் பழைய பைபாஸ் சாலை இந்தியன் வங்கி அருகே உள்ள அவருக்கு சொந்தமான இடத்திலும் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேல் நடைபெற்று வரும் சோதனையில் சொத்து ஆவணங்கள, வங்கி கணக்கு உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிகிறது. டயர் மணி என்கிற காளியப்பன், வீட்டில் இன்றும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
பரமத்தி வேலூர் பக்கமுள்ள பொத்தனூரை சேர்ந்தவர் மணி. பல வருடமாகவே டயர் கடை வைத்திருக்கும் மணிக்கு திண்டுக்கல மாவட்டம் வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் சாமிநாதன் நெருங்கிய உறவினர்.
செந்தில் பாலாஜிக்கும் சாமிநாதனுக்கும் பழக்கம் உண்டு. டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு பல வருடங்களாக டயர் சப்ளை செய்து வருவதும் மணிதான். இருவருக்குள்ளும் நல்ல புரிதலோடு, ஒரு சமூக நெருக்கம் உண்டு. அதனால் பல சொத்து விசயங்களில் மணியை தெரியாத பினாமியாக செந்தில் பாலாஜி வைத்திருந்தார் என அமலாக்கத்துறை சந்தேகப்படுவதால், அவரது வீட்டில் ரெய்டு மேளா நடைபெற்று வருகிறது என்கின்றனர் அவருக்கு நெருக்கான வட்டாரங்கள்.
இதுவரை 600 சொத்து ஆவணங்களை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று 2 பை, இன்று ஒரு பை எடுத்து போயிருக்காங்க. ரொக்கமா ரெண்டு கோடி கைப்பற்றி இருக்கிறதா தகவல் வெளியாகியிருக்கு.
பழைய டயரில் மறைத்து வைத்திருந்த பணம், ஆவணத்தையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சாதுர்யமாக கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இதில், எது உண்மை, எது பொய் என தெரியவில்லை. அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டால் தான் தெரியும் என்றார்கள் விவரமறிந்தவர்கள். தொடர்ந்து சோதனை நடந்து கொண்டிருக்கிறது.
- சேலம் பழனிவேல்