ஏப்ரல் 24 அன்று சிவமொகாவில் உள்ள வினோபா நகரில் உள்ள எடியூரப்பாவின் இல்லத்தில் நடைபெற்ற வீரசைவ - லிங்காயத் சமூகத்தினர் கூட்டத்தில் உரையாற்றிய பி.எஸ்.ஈஸ்வரப்பா, “அனைத்து சாதி மக்களிடமும் பழகுவோம். பா.ஜ.க ஆட்சியின் போது அவர்கள் அனுபவித்த நன்மைகள் குறித்து விசாரிப்போம். ஒவ்வொரு சமூகமும் பயனடைந்துள்ளது. நகரில் சுமார் 60,000 இஸ்லாமியர்கள் உள்ளனர். அவர்களின் வாக்குகள் எங்களுக்கு வேண்டாம். அவர்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் தனித்தனியாக எங்கள் உதவியைப் பெற்றுள்ளார்கள். தேசியவாத இஸ்லாமியர்கள் நிச்சயம் பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பார்கள். வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேச வேண்டாம்; இந்து - இஸ்லாமியர் பிரச்னை குறித்து பேசி தேர்தலை சந்திப்போம்.