100 கோடி மக்களைச் சென்றடைந்த பிரதமரின் ’மனதின் குரல்’- ஐஐஎம் கருத்துக் கணிப்பு

100 கோடி மக்களைச் சென்றடைந்த பிரதமரின் ’மனதின் குரல்’- ஐஐஎம் கருத்துக் கணிப்பு
100 கோடி மக்களைச் சென்றடைந்த பிரதமரின் ’மனதின் குரல்’- ஐஐஎம் கருத்துக் கணிப்பு

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி 100 கோடி இந்தியர்களைச் சென்றடைந்து இருப்பதாக ஐஐஎம் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

 பிரதமர் நரேந்திர மோடி, தனது எண்ணங்களை நாட்டு மக்களோடு பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சிதான் ’மனதில் குரல்’ நிகழ்ச்சி.  இந்த நிகழ்ச்சி சில ஆண்டுகளாக, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி 100 கோடி  இந்தியர்களைச் சென்றடைந்து இருப்பதாக ஐஐஎம் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

பிரதமரின் 100வது மனதின் குரல் நிகழ்ச்சி வரும் 30ஆம் தேதி  ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சி குறித்த நேயர்களின் கருத்து என்ன என்று  ஹரியானா மாநிலம் ரோத்தக்கில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) கருத்துக் கணிப்பு நடத்தியது.

அதனைத் தொடர்ந்து, கருத்துக்கணிப்பின் முடிவுகளை பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி கௌரவ் திவேதி, ஐஐஎம் நிறுவனத்தின் இயக்குநர் தீரஜ்.பி.சர்மா ஆகியோர் வெளியிட்டனர். 

அதுக்குறித்து விவரித்த ஐஐஎம் நிறுவனத்தின் இயக்குநர் சர்மா 23 கோடி மக்கள் மனதின் குரல் நிகழ்ச்சியை தொடர்ச்சியாக கேட்டு வருவதாகவும்,மத்திய அரசின் அணுகுமுறை மக்கள் நலனுக்கு சாதகமானதாக அமைந்திருப்பதாக 63 சதவீதத்தினரும், தேசத்தை கட்டியமைப்பதற்கான முன்முயற்சியாக இருப்பதாக 60 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளனர். 

இந்த நிகழ்ச்சி பிரஞ்சு, சைனீஸ், இந்தோனேஷியன், திபெத்தியன் உட்பட  11 அயல்நாட்டு மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒலிபரப்பப்பட்டு வருவதாக  கூறினார். 

மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியியை, இம்மாதம் 30-ம் தேதி, காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியில் மற்றும் தூர்தர்ஷனின் அனைத்து அலைவரிசைகளிலும் ஒலிபரப்பப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com