மதுரை : 3 மாதங்களாக நிறுத்தப்பட்ட உதவித்தொகை - கதறிய மூதாட்டிக்கு சொந்தப் பணம் கொடுத்த கலெக்டர்

மதுரை : 3 மாதங்களாக நிறுத்தப்பட்ட உதவித்தொகை - கதறிய மூதாட்டிக்கு சொந்தப் பணம் கொடுத்த கலெக்டர்
மதுரை : 3 மாதங்களாக நிறுத்தப்பட்ட உதவித்தொகை - கதறிய மூதாட்டிக்கு சொந்தப் பணம் கொடுத்த கலெக்டர்

பாதிக்கப்பட்ட மூதாட்டி கண்ணீருடன் நடக்க முடியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

மதுரையில், 85 வயதான மூதாட்டிக்கு உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டதால் ரெம்பவே சிரமப்பட்டு தவித்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டிக்கு மாவட்ட ஆட்சியர் தன் சொந்த பணத்தைக் கொடுத்ததோடு  உடனே உதவி தொகை கிடைக்கவும் நடவடிக்கைகள் எடுத்த ஆட்சியருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மதுரை, கீரைத்துறை பகுதியைச் சேர்ந்தவர் சுருளியம்மாள். 85 வயதான இவர், முதியோர் உதவித்தொகையைப் பெற்று தனது தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக மூதாட்டிக்கு உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால், பாதிக்கப்பட்ட மூதாட்டி கண்ணீருடன் நடக்க முடியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். 
அங்கிருந்த சமூக ஆர்வலர் நாகேஸ்வரன் உதவியுடன், தனது பிரச்சனையை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகரிடம் மூதாட்டி முறையிட்டார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட சமூகநலத்துறை அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டதில், மூதாட்டியின் தொடர்பு எண் முறையாக இல்லாததால் உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். 
பின்னர், மாவட்ட ஆட்சியர் மூன்று மாதத்திற்கான பணத்தை மூதாட்டியிடம் வழங்கினார். அதன் பிறகு மூதாட்டியின் தெளிவான முகவரி, மொபைல் எண் உள்ளிட்டவற்றை சேகரித்து வந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கியிருக்கிறார் சமூக ஆர்வலர் நாகேஸ்வரன்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com