'கலைஞருக்கு என் சாதியே 9 ஆண்டுகளாக தெரியாது' - வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

'கலைஞருக்கு என் சாதியே 9 ஆண்டுகளாக தெரியாது' - வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு
'கலைஞருக்கு என் சாதியே 9 ஆண்டுகளாக தெரியாது' - வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

கோபாலபுர வீட்டிற்கு நான் சென்றபோது தலைவர் (ஸ்டாலின்) சின்ன பையன். நாங்கள் எல்லாம் ஓய் என்று மிரட்டுவோம். ஓடி போய் விடுவார்

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பகுதியில் திமுகவின் சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பங்குபெற்றனர். 

அப்போது பேசிய துரை முருகன், ”காட்பாடி நகரமாக நன்கு வளர்ச்சி அடைந்து விட்டது. காட்பாடியில் உள்ள காவல் நிலையத்தில் அதிக வழக்குகள் வருகிறது. சமாளிக்க முடியவில்லை என டிஎஸ்பி சொன்னார். சட்டப்பேரவையில் துண்டு சீட்டில் எழுதி முதல்வரிடம் காண்பித்தேன். அப்போதே சட்டப்பேரவையில் பிரம்மபுரம் பகுதியில் மேலும் ஒரு காவல் நிலையத்தை அமைக்க அறிவித்தார் என்றார். 

அம்மாவுக்கு ஆயிரம், பொண்ணுக்கு ஆயிரம் கொடுத்தாச்சு. பஸ் விட்டு இருக்கோம். போர் அடிச்சா பஸ் ஏறு ஆற்காடு போ, அங்கு வரும் பஸ்ஸில் மீண்டும் ஏறு.. குடியாத்தம் போ.. யாரு என்ன கேட்கப் போகிறார்கள், என மகளிர் இலவச பேருந்து திட்டத்தை மேற்கோள் காட்டி பேசினார்.  23 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்துள்ளோம். புதியதாக ஒரு லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை கொடுக்கிறோம்” என திமுகவின் நலத்திட்டங்கள் பற்றி பேசினார்.

மேலும் தொடர்ந்த அவர், ”கோபாலபுர வீட்டிற்கு நான் சென்றபோது தலைவர் (ஸ்டாலின்) சின்ன பையன். நாங்கள் எல்லாம் ஓய் என்று மிரட்டுவோம். ஓடி போய் விடுவார். பிறகு வளர்த்து தோளுக்கு வந்த தோழனாகி இன்று தலைக்கு மேல் வளர்ந்து எனக்கே தலைவனாகி இருக்கிறார். எங்கேயோ இருந்து வந்த என்னை காட்பாடி தொகுதியில் அறிமுகப்படுத்திய போது யோவ் தொற நீ வன்னியரா? என்று கலைஞர் கேட்டார். 1962ல் இருந்து அவருடன் பழகி வந்து கொண்டிருக்கிறேன். 1971 வரை அவருக்கு நான் என்ன ஜாதி என்றே கலைஞருக்கு தெரியாது. அப்படிப்பட்ட பழக்கம் எங்களுக்குள் இருந்தது. அப்பேற்பட்டவர் என்னை வளர்த்தவர். அத்தகைய தலைவனின் மகனை ஏன் தோளில் சுமப்பதிலே எனக்கு என்ன வெட்கம். அதனால் தான் நான் கோபாலபுரத்து விசுவாசி” என உருக்கமாக பேசினார். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com