தஞ்சாவூர்: பழைய பேப்பர்களை சேகரித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

தஞ்சாவூர்: பழைய பேப்பர்களை சேகரித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
தஞ்சாவூர்: பழைய பேப்பர்களை சேகரித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

தரக்குறைவாக பேசி செருப்பால் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பட்டுக்கோட்டையில் சாலையில் கிடந்த பழைய பேப்பர், பாட்டில்களை சேகரித்த பெண்ணை செருப்பால் அடித்து விரட்டும் நபர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். 
சாலையோரங்களில் வீசப்பட்ட பழைய பாட்டில்கள், பேப்பர்களை சேகரித்த ஏழைப் பெண்ணை, ஒருவர் செருப்பால் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகர் பகுதியில் மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த பல குடும்பங்கள் பிழைப்பிற்காக குழந்தைகளுடன் ஒவ்வொரு பகுதியாக சென்று சாலையோரம் கிடக்கும் பழைய பாட்டில்கள், பழைய பேப்பர்கள், இரும்பு பொருட்களை சேகரித்து அவற்றை கடையில் விற்று  குடும்பம் நடத்தி வருகின்றனர். 
இந்நிலையில் இன்று பட்டுக்கோட்டை அருகே உள்ள குறிச்சி பகுதியில் சாலையோரம் கிடந்த பாட்டில்கள், பழைய பேப்பர்களை பெண்கள் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பேராவூரணி திமுக வடக்கு ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் தீபலட்சுமியின் கணவர் சாமிநாதன் அந்தப் பெண்களை தரக்குறைவாக பேசி செருப்பால் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெண்களை செருப்பால் தாக்கிய சாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com