தி.மு.க. அரசின் 12 மணி நேர வேலை மசோதா - வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா வரவேற்பு

தி.மு.க. அரசின் 12 மணி நேர வேலை மசோதா - வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா வரவேற்பு
தி.மு.க. அரசின் 12 மணி நேர வேலை மசோதா -  வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா வரவேற்பு

ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என்றால் 4 நாட்களில் வேலை முடித்துவிடும். பின்னர் 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும்

தி.மு.க. அரசு கொண்டு வந்த  12 மணி நேர வேலை மசோதாவை வரவேற்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த சட்ட மசோதாவுக்கு, திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதுபோல, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக என தமிழத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.

இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., வி.சி.க., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், இந்த மசோதாவுக்கு அதிமுகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 

இந்த நிலையில், கூட்டணி கட்சிகள் எதிர்ப்பை மீறி, ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர், சில நிபந்தனைகளோடு தான் இந்த  சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், தி.மு.க. அரசு கொண்டு வந்த  12 மணி நேர வேலை மசோதாவை வரவேற்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,  "வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்பது சட்டம். 

ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என்றால் 4 நாட்களில் வேலை முடித்துவிடும். பின்னர் 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இந்த சட்டம் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தாது. இந்த சட்டத்தை விரும்பும் தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, இந்த சட்டத்தை நாங்கள் மனதார வரவேற்கிறோம் என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com