தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட மசோத தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன் தினம் தாக்கம் செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இந்த சட்ட மசோதாவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தாக்கல் செய்த போதே தி.மு.க கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவை கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.