அ.ம.மு.க-வில் இருந்து அடுத்த விக்கெட் - அ.தி.மு.க-வில் இணைந்த முன்னாள் அரசு கொறடா

அ.ம.மு.க-வில் இருந்து அடுத்த விக்கெட் - அ.தி.மு.க-வில் இணைந்த முன்னாள் அரசு கொறடா
அ.ம.மு.க-வில் இருந்து அடுத்த விக்கெட் - அ.தி.மு.க-வில் இணைந்த முன்னாள் அரசு கொறடா

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளரும், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளருமான ஆர்.மனோகரன் கட்சியில் இருந்து விலகி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைத்துக் கொண்டார்.
சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடந்த இந்த விழாவில், திருச்சி ஆர்.மனோகரனுடன் திருச்சி மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் தினேஷ்குமார், மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்துல் ரகுமான், அந்தநல்லூர் ஒன்றிய கழகச் செயலாளர் சாத்தனூர் பி.வாசு உள்ளிட்ட நிர்வாகிகள் அ.ம.மு.க-வில் இருந்து விலகி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
2011 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்குத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஆர்.மனோகரன். 2011ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் அரசு தலைமை கொறடாவாக இருந்தவர் ஆர்.மனோகரன்.
2020ம் ஆண்டு அ.தி.மு.க-வில் இருந்து விலகி அ.ம.மு.க-வில் இணைந்த ஆர். மனோகரனை அக்கட்சியின் பொருளாளராக நியமித்தார் டி.டி.வி.தினகரன். தற்போது மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்துள்ளார் ஆர்.மனோகரன்.  

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com