'முதலமைச்சரையும் என்னையும் பிரிக்க முடியாது - ஆடியோ சர்ச்சைக்கு பி.டிஆர். விளக்கம்

'முதலமைச்சரையும் என்னையும் பிரிக்க முடியாது - ஆடியோ சர்ச்சைக்கு பி.டிஆர். விளக்கம்
'முதலமைச்சரையும் என்னையும் பிரிக்க முடியாது - ஆடியோ சர்ச்சைக்கு பி.டிஆர். விளக்கம்

ஆடியோ கிளிப்பின் தடயவியல் ஆய்வு குறித்த ஸ்கிரீன் ஷாட்டையும் வெளியிட்டுள்ளார்

'நான் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது, எனது தலைவர் மு.க.ஸ்டாலினிடம் என்னை பிரிக்கும் முயற்சி வெற்றி பெறாது' என தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக நிதியமைச்சராக இருப்பவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். தி.மு.க. அரசின் மிக முக்கிய அமைச்சர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஆடியோ வெளியிட்டிருந்தார். அது ஆங்கில உரையாடல் வடிவில் இருந்தது.

இந்த ஆடியோ குறித்து, அண்ணாமலை கருத்து தெரிவிக்கையில், இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசு விளக்கம் அளிக்காமல் மவுனமாக இருப்பது, மக்களுக்கு செய்யும் அநீதி என முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும்" என்று டிவிட்டரில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலானது.

இந்த நிலையில், இது தொடர்பாக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். அதில், 'நான் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது. தி.மு.க-விற்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் வெட்டி ஒட்டிப்பட்டவை. 

நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, யார் வேண்டும் என்றாலும் இது போன்ற ஒரு போலியான ஆடியோவை உருவாக்க முடியும்' என்றும், ஆடியோ கிளிப்பின் தடயவியல் ஆய்வு குறித்த ஸ்கிரீன் ஷாட்டையும் வெளியிட்டுள்ளார். மேலும், 'மு.க.ஸ்டாலினிடம் என்னை பிரிக்கும் தீய சக்திகளின் முயற்சி வெற்றி பெறாது' என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com