பஞ்சாப் : காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு தலைவர் அம்ரித்பால் சிங் கைது - சிக்கியது எப்படி?

பஞ்சாப் : காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு தலைவர் அம்ரித்பால் சிங் கைது - சிக்கியது எப்படி?
பஞ்சாப் : காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு தலைவர் அம்ரித்பால் சிங் கைது - சிக்கியது எப்படி?

வாரிஸ் பஞ்சாப் தே' என்ற சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவராக இருப்பவர் அம்ரித்பால் சிங்

அமிர்தசரஸ் காவல் நிலையத்தை சூறையாடிய வழக்கில் தேடப்பட்டு வந்த, காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்தனர்.

'வாரிஸ் பஞ்சாப் தே' என்ற சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவராக இருப்பவர் அம்ரித்பால் சிங். இவர், தன்னைத்தானே சீக்கிய மதகுருவாக அறிவித்துக் கொண்டார். பஞ்சாப் மாநிலம் ரூப்கர் மாவட்டம் சாம் கவுர் சாகிப் என்ற பகுதியைச் சேர்த்த பரிந்தர் சிங் என்பவரை கடத்திச் சென்று தாக்கியதாக, அம்ரித்பால் சிங் உள்ளிட்ட 3 பேர் மீது அம்மாநில காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். 

இந்த வழக்கு தொடர்பாக லவ் ப்ரீத் சிங் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரை மீட்க, அம்ரித்பால் சிங் தலைமையிலான சிலர், அஜினாலா காவல் நிலையத்திற்குள் புகுந்து வாள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் போலீசாரை தாக்கியுள்ளனர். 

இதனால், அம்ரித்பால் சிங் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் கொலை முயற்சி, போலீஸார் மீது தாக்குதல் மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதனால், அம்ரித்பால் சிங் தலைமறைவானார். அவரை கடந்த ஒரு மாதமாக போலீஸார் தேடி வந்தனர். 

இந்த நிலையில், மோகாவில் அம்ரித்பால் சிங் சரணடைந்துள்ளார். ஏற்கனவே, அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது, அம்ரித் பால் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com