சங்கரன்கோவில்: கோவில் முன் இஸ்லாமியர்கள் முழக்கம் -காவல்துறையை எச்சரித்த இந்து முன்னணி

சங்கரன்கோவில்: கோவில் முன் இஸ்லாமியர்கள் முழக்கம் -காவல்துறையை எச்சரித்த இந்து முன்னணி
சங்கரன்கோவில்: கோவில் முன் இஸ்லாமியர்கள் முழக்கம் -காவல்துறையை எச்சரித்த இந்து முன்னணி

இந்து முன்னணி அளித்த புகார் விசாரணையில் ரமலான் ஊர்வலத்தில் கோஷம் எதுவும் எழுப்ப மாட்டார்கள்.

சங்கரன் கோவிலில் ரமலான் ஊர்வலத்தில் கோமதியம்மன் கோவில் முன்பு 'அல்லா மட்டுமே கடவுள்' என முழக்கமிட்டு இஸ்லாமியர்கள் பேரணி நடத்தியதற்கு நடவடிக்கை எடுக்க இந்துமுன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து  இந்து முன்னணி, மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் கூறுகையில், ‘’தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் 22.4.2023 இன்று ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கான பேர் அங்கு பிரசித்தி பெற்ற கோமதி அம்மன் திருக்கோவில், முப்புடாதி அம்மன் கோவில் வழியாக ரம்ஜான் ஊர்வலம் சென்றுள்ளனர். செல்கிற வழிகளில் ’அல்லாஹ் ஒருவனே இறைவன்’எனப் பொருள் படும்படியாக அரபு மொழியில் கோஷமிட்டு செல்கின்றனர்.
இது இந்துக்களின் இறை நம்பிக்கையையும், மதஉணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும் எனக் கூறி இந்த ஊர்வலத்தை கோவில்கள் உள்ள பாதை வழியாக அனுமதிக்க கூடாது என இந்து முன்னணி சார்பில் நேற்று காவல்துறையில் முறையாக ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் காவல்துறை அருள்மிகு கோமதி அம்மன் திருக்கோவிலுக்கு செல்லும் பிரதான பாதையில் தேரடி ஆர்ச் அருகே பேரிகார்டுகள் வைத்து கோவிலுக்கு உள்ளே இந்துக்கள் கூட யாரும் செல்ல முடியாதவாறு தடுத்து ரம்ஜான் ஊர்வலத்தை நடத்த வழி வகுத்துக் கொடுத்திருக்கின்றனர். 
இது மிகவும் கண்டனத்திற்குரிய செயல். இந்து மக்களின் எதிர்ப்பை மீறி நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள், கோவில் முன்பாக அல்லாஹ் மட்டுமே கடவுள் என கோஷமிட்டு சென்றுள்ளனர். சில இளைஞர்கள் வேண்டுமென்றே கோவில் முன்பாக சில நிமிடங்கள் நின்று பிரச்சனையை தூண்டும் வகையில் அரபு மொழியில் பல்வேறு கோஷங்களை எழுப்பி உள்ளனர். இந்த வீடியோ பதிவுகளைப் பார்க்கும் போது இது சங்கரன்கோவிலா? அல்லது பாகிஸ்தானா? எனச் சந்தேகம் ஏற்படும் வகையில் முஸ்லீம்கள் பேரணி நடைபெற்றுள்ளது. முஸ்லிம்கள் எதிர்ப்பு காரணமாக காந்திநகர் பள்ளிவாசல் முன்பு கழுகுமலை ரோடு வழியாக இந்துக்களின் ஆன்மீக நிகழ்வுகளுக்கு தேவேந்திரகுல மக்கள் மேளம் அடித்து செல்ல அனுமதி மறுக்கும் காவல்துறை, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்ல அனுமதி மறுக்கும் காவல்துறை இந்துக்களின் ஆட்சேபனைக்குப் பிறகும் கோமதியம்மன் கோவில் வழியாக இந்துக்கள் கோயிலுக்குள் செல்ல இயலாதவாறு தடுத்து நிறுத்தி இஸ்லாமியர்கள் ஊர்வலத்தை அனுமதித்துள்ளது ஒருதலைபட்சமான நடவடிக்கையாகும்.
இந்து முன்னணி அளித்த புகார் விசாரணையில் ரமலான் ஊர்வலத்தில் கோஷம் எதுவும் எழுப்ப மாட்டார்கள். எழுப்பினால் வழக்கு பதிவு செய்யப்படும் என உறுதிமொழி அளித்த பின்பும் வேண்டுமென்றே ஊர்வலத்தில் பலர் அல்லா ஒருவனே கடவுள் என பொருள்படும்படி அரபு மொழியில் கோவில் முன்பாக கோசமிட்டு சென்றுள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது. தவறினால் காவல்துறையின் ஒரு தலைபட்சமான போக்கைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும்’’என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com