'உண்மையைப் பேசியதற்கான விலை இது' - அரசு பங்களாவை காலி செய்த ராகுல்

'உண்மையைப் பேசியதற்கான விலை இது' - அரசு பங்களாவை காலி செய்த ராகுல்
'உண்மையைப் பேசியதற்கான விலை இது' - அரசு பங்களாவை காலி செய்த ராகுல்

மத்திய டெல்லியின் 10 ஜன்பத்தில் உள்ள அவரது தாயார் சோனியா காந்தியின் பங்களாவுக்கு அவர் மாறுவார்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தின் மக்களவை எம்.பி.யாக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து காலக்கெடுவின் கடைசி நாளான இன்று மத்திய டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்தார். 
ராகுல் காந்தியும் அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி, காலை முதல் இரண்டு முறை அந்த பங்களாவுக்குச் சென்றுள்ளனர்.  சி.ஆர்.பாட்டீல் தலைமையிலான மக்களவை வீட்டு வசதிக் குழு, 2005 ஆம் ஆண்டு முதல் ராகுல் காந்தி தங்கியுள்ள 12 துக்ளக் லேன் பங்களாவை ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் காலி செய்யுமாறு அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இருப்பினும் ராகுல் காந்தி நெறிமுறைப்படி வெளியேற வேண்டும். மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கு அரசு கொடுத்த வீடுகளில் தங்கும் உரிமை இல்லை. அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்ய ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டது. குஜராத் நீதிமன்றம் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் அளித்தது. வயநாடு முன்னாள் எம்.பி., தற்போது தனது மக்களவை உறுப்பினர் பதவியை தக்கவைத்துக் கொள்ள சூரத் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
முன்னதாக ஏப்ரல் 3 ஆம் தேதி, இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்முறையீடு செய்த ராகுல் காந்திக்கு சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலம் சூரத்தில் 2019 ஆம் ஆண்டு தேர்தல் பேரணியில் பேசிய ராகுல் காந்தி, மோடி சமூகத்தை அவமதித்ததாகக் கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  
அவருக்கு வழங்கப்பட்ட அரசு வீட்டைக் காலி செய்ய ஒப்புக்கொண்ட ராகுல் காந்தி, மத்திய டெல்லியின் 10 ஜன்பத்தில் உள்ள அவரது தாயார் சோனியா காந்தியின் பங்களாவுக்கு அவர் மாறுவார் என்று கூறப்படுகிறது. வீட்டைக் காலி செய்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய ராகுல் காந்தி, "உண்மையைப் பேசுவதற்கு நான் விலை கொடுக்கிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com