தென்காசி: அரசுப் பணத்தை தனது வங்கிக் கணக்கில் வரவு செய்த அதிகாரி- என்ன நடந்தது?

தென்காசி: அரசுப் பணத்தை தனது வங்கிக் கணக்கில் வரவு செய்த அதிகாரி- என்ன நடந்தது?
தென்காசி: அரசுப் பணத்தை தனது வங்கிக் கணக்கில் வரவு செய்த அதிகாரி- என்ன நடந்தது?

ஐந்து மாத கணக்குகள் ஆடிட் செய்யப்பட்டதில் வங்கி கணக்கில் 19 லட்சம் ரூபாய் குறைந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

அரசு வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டிய பணத்தை தன் வங்கிக் கணக்கில் போட்டு ரூ19 லட்சத்தை  மோசடி செய்த கணக்காளர் மகேஸ்வரி மீது நடவடிக்கை எடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. 
தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் அமைந்திருக்கிறது. இந்த அலுவலக மேலாளராக ராதா பணியாற்றுகிறார். கணக்காளராக சங்கரன்கோயில் அருகில் உள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த மகேஸ்வரி இருக்கிறார். இந்த அலுவலத்திற்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் இரண்டு நிரந்தர வைப்புத் தொகை கணக்கு இருக்கிறது.
இன்னொரு அரசு வங்கியில் சாதாரண சேமிப்புக் கணக்கு இருக்கிறது. அலுவலகத்தின் அன்றாட தேவைகளுக்கு இந்தக் கணக்கில் இருந்து பணம் எடுத்துக் கொள்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த அலுவலகக் கணக்கு வழக்குகள் ஆடிட் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் வரையிலான ஐந்து மாத கணக்குகள் ஆடிட் செய்யப்பட்டதில் வங்கி கணக்கில் 19 லட்சம் ரூபாய் குறைந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இது குறித்து கணக்காளர் மகேஸ்வரியிடம் கேட்டதற்கு, அவர் மழுப்பலான பதில் கூறினார். எனவே அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் முறையாக பதில் கொடுக்காமல் தலைமறைவாகி விட்டார். எனவே, அதிகாரிகள் வங்கி மேலாளரிடம் விசாரணை நடத்தியதில் அரசுப் பணத்தை அரசு வங்கிக் கணக்கில் செலுத்தாமல் மகேஸ்வரி தன் கணக்கில் வரவு வைத்து மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. தற்போது அவர் மீது போலீசில் புகார் செய்ய ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com