‘வி.பி.சிங்- கிற்கு கம்பீர சிலை அமைக்கப்படும்’ - ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு

‘வி.பி.சிங்- கிற்கு கம்பீர சிலை அமைக்கப்படும்’ - ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு
‘வி.பி.சிங்- கிற்கு கம்பீர சிலை அமைக்கப்படும்’ - ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு

’சமூக நீதிக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் நாங்கள் அவர்கள் பக்கம் நின்று வாதாடுவதற்கு, அவர்களை ஆதரிப்பதற்கு என்றும் உறுதுணையாக இருப்போம்’

சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவச்சிலை நிறுவப்படும் என்று அறிவித்தார்.

சட்டப்பேரவையில் 10-வது விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘வி.பி.சிங் பிரதமராக இருந்தது 11 மாதங்கள்தான் என்றாலும் அவர் செய்த சாதனைகள் மகத்தானது என்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தவர் வி.பி.சிங் எனக்கூறி வி.பி.சிங்கை ‘சமூகநீதிக் காவலர்’ என புகழாரம் சூட்டி பேசினார். 

மேலும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவச்சிலை நிறுவப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனை வரவேற்று சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வமும் இந்த தீர்மானத்தை வரவேற்று பேசினார். 

அப்போது அவர் கூறுகையில், ’சமூக நீதியைக் காப்பதில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆற்றிய பணியை அறிக்கையின் வாயிலாக கேட்டோம். சமூக நீதிக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் நாங்கள் அவர்கள் பக்கம் நின்று வாதாடுவதற்கு, அவர்களை ஆதரிப்பதற்கு என்றும் உறுதுணையாக இருப்போம்’ எனக் குறிப்பிட்டு வரவேற்று பேசினார். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com