சென்னை: மண்ணடியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரம்

சென்னை: மண்ணடியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரம்
சென்னை: மண்ணடியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரம்

4 பேர் வரை சிக்கியிருப்பதாகக் கூறப்படும் நிலையில் அதில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்

சென்னை மண்ணடியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சென்னை மண்ணடி அரண்மனைக்காரன் தெருவில் அமைந்துள்ளது 100 ஆண்டுகள் பழைய கட்டிடம். இந்த கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில்,  இந்த கட்டிடத்தை புதுப்பிக்கும் போது, யாரும் எதிர்பார வகையில், திடீரென அந்த கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், கட்டிட பராமரிப்பு பணியில் இருந்த 4 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  தீயணைப்புப் படை மீட்புப்பணியினர் விரைந்து வந்தனர். ஆனால், அந்தப் பகுதி மிகவும் குறுகலாக உள்ளதால், உள்ளே செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனிடையே, மீட்பு பணிகளை விரைந்து முடிக்க தேசிய பேரிடர் மீட்பு படையினர், அடையாறு, அரக்கோணத்தில் இருந்து மண்ணடிக்கு விரைந்துள்ளனர். 

மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த சென்னை மாநகர மேயர் ப்ரியா, மீட்டபு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். அங்கு நடக்கும் பணிகளை உயரதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.  

கட்டிட இடிபாடுகளில் 4 பேர் வரை சிக்கியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதில் ஒருவர் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளளார். மற்றவர்களை மீட்கும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com