மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உளவியல் துறை பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டை அடுத்துள்ள மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் உளவியல் துறையில் பேராசியராக பணியாற்றிவருபவர் கருப்பையா. இவர் பல்கலைகழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த பாதிக்கப்பட்ட மாணவிகள் பேராசிரியர் மீது புகார் அளித்தும் பல்கலைகழகம் சார்பில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்துப் பாதிக்கப்பட்ட மாணவிகள் தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராகர்கைச் சந்தித்து நேரடியாக புகார் அளித்தனர்.
அந்த புகாரை டி.ஐ.ஜி.பொன்னி, விசாரிக்க ஐ.ஜி அஸ்ராகார்க் உத்தரவிட்டார். அதனையடுத்து மதுரை சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் கருப்பையாவை கைது செய்து 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைதான பேராசிரியரால் மதுரை காமராஜர் பல்கலைகழக வட்டாரங்களில் மாணவ -மாணவிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் பேராசிரியர்கள் பாலியல் சிக்கலில் சிக்கி வருகின்றனர்.