புதுச்சேரி: ’என் கள்ளக்காதலனைப் பார்க்கணும் அனுமதி கொடுங்க’-சிறைக்குள் நச்சரிக்கும் இளம்பெண் கைதி

புதுச்சேரி: ’என் கள்ளக்காதலனைப் பார்க்கணும் அனுமதி கொடுங்க’-சிறைக்குள் நச்சரிக்கும் இளம்பெண் கைதி
புதுச்சேரி: ’என் கள்ளக்காதலனைப் பார்க்கணும் அனுமதி கொடுங்க’-சிறைக்குள் நச்சரிக்கும் இளம்பெண் கைதி

சிறை வளாகத்தில் இருக்கும் தன்னுடைய கள்ளக் காதலன் சப்-இன்ஸ்பெக்டர் ஜெரோமை சந்திக்க அனுமதி

புதுச்சேரி சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள பெண் தொழிலதிபர் புவனேஸ்வரிக்கும், அவரது கள்ளக்காதலனும் சப்-இன்ஸ்பெக்டருமான ஜெரோமிற்கும் சலுகைகள் கொடுக்குமாறு மர்ம கடிதத்துடன் பார்சல் ஒன்று வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் கடந்த மாதம் போலி நகைகளை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக இளம் தொழிலதிபர் புவனேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரது கள்ளக்காதலனும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெரோம் என்பவர் உள்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையல் அடைக்கப்பட்டுள்ளனர். 
புவனேஸ்வரி மட்டும் போலீஸ் அதிகாரி ஒருவர் உதவியின் மூலம் தப்பிச்சென்று விட்டார். பின்னர், போலீஸ் உயர் அதிகாரிகளின் பலத்த தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் நிலக்கரி தொழிலதிபர் ஒருவரின் சொகுசு பங்களாவில் புவனேஸ்வரியை கைது செய்து புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.
இவர்கள், அடகு வைக்கும் நகைகளின் வெளிப்பூச்சு ஒரிஜினல் 916 தரத்தில் இருக்கும். உள்ளே முழுக்க செம்பு கம்பி இருக்கும். 916 நகையை கண்டறியும் மிஷினில் வைத்தாலும் 916 என்றே காட்டும். போலி ஹால்மார்க்குடன் இருக்கும் இந்த நகையை இரண்டாக வெட்டிப்பார்த்தால் மட்டுமே போலி என்று தெரியவரும். இப்படியான போலி நகைகளை கோவையில் உள்ள நகை தயாரிப்பாளர்கள் மூலம் தயாரித்து அதனை காரைக்கால் மற்றும் அதனையொட்டிய தமிழக பகுதிகளில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், அடகு  கடைகள் ஆகியவற்றில் தங்களுக்கு தெரிந்த நபர்கள் மூலம் அடகு வைத்து பல கோடிகளை சுருட்டி உள்ளனர்.
இந்த நகைகளை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யமாட்டார்கள். காரணம் விலைக்கு வாங்கிய நகைக்கடைக்காரர்கள் உடனே இந்த நகைகளை உருக்கவோ அல்லது வெட்டவோ செய்தால் இவர்களின் குட்டு வெளிப்பட்டுவிடும். இவர்களுக்காக நகைகளை அடகு வைத்து கொடுப்பவர்களுக்கு ஒரு கிராமிற்கு 200 ரூபாய் கமிஷனாக கொடுத்துள்ளனர். இப்படியான மோசடியில் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
ஆடி, பென்ஸ், ஜாக்குவார் என வெளிநாட்டு கார்களை வைத்திருக்கும் புவனேஸ்வரியை போலீசார் கஸ்டடி எடுத்து ஒரு ஆடம்பர ஹோட்டலில் ஏ.சி அறையில் வைத்துதான் விசாரித்துள்ளனர். தற்போது புதுச்சேரி சிறையில் இருக்கும் புவனேஸ்வரி,  ஜாமீன் கேட்டு உயர்நீதி மன்றத்தை அணுகியுள்ளார். இந்நிலையில் தனக்கு சிறையில் கொடுக்கப்படும் பழைய டம்ளர் வேண்டாம். புதிய டம்ளர் மற்றும் பால் கொடுக்கவேண்டும் என்றபடி உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
அத்துடன் அதே சிறை வளாகத்தில் இருக்கும் தன்னுடைய கள்ளக் காதலன் சப்-இன்ஸ்பெக்டர் ஜெரோமை சந்திக்க அனுமதிக்குமாறு கேட்டும் தகராறு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே புவனேஸ்வரிக்கும், ஜெரோமிற்கும் சலுகைகள் கொடுக்குமாறு மர்ம கடிதத்துடன் பார்சல் ஒன்றும் சிறை நிர்வாகத்திற்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. 
இது தொடர்பாக  சிறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அப்படியெல்லாம் ஒன்றுமே நடக்கவில்லை’என்று மறுத்துவிட்டனர். ’நெருப்பில்லாமல் புகையுமா? 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com