கரூர்: கழிவுநீர் வடிகால் குழியில் இறங்கி போராட்டம் - தம்பதி மீது கான்கிரீட் கலவையைக் கொட்டிய ஒப்பந்ததாரர்

கரூர்: கழிவுநீர் வடிகால் குழியில் இறங்கி போராட்டம் - தம்பதி மீது கான்கிரீட் கலவையைக் கொட்டிய ஒப்பந்ததாரர்
கரூர்: கழிவுநீர் வடிகால் குழியில் இறங்கி போராட்டம் - தம்பதி மீது கான்கிரீட் கலவையைக் கொட்டிய ஒப்பந்ததாரர்

கால்வாய் கட்டித் தரப்படும் என்று உறுதியளித்தனர். இதன் பிறகு, தம்பதியினர் பள்ளத்தை விட்டு வெளியே வந்தனர்.

கரூரில் கழிவு நீர் வடிகால் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட கணவன், மனைவி மீது கான்கிரீட் கலவையைக் கொட்டிய ஒப்பந்ததாரரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாநகராட்சி, 16 வது வார்டு ஜே.ஜே.நகர் பகுதியில் கழிவு நீர் வடிகால் கட்டுமான பணி கடந்த சில பத்து நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பணி நடைபெற்று வரும் இடத்தில், ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு குழி தோண்டும்போது சம்பந்தப்பட்ட வீட்டின் பக்கவாட்டுச் சுவர் அடித்தளம் பெயர்ந்து விழுந்துள்ளது. 
இதன் காரணமாக வீடு வலுவிழந்ததால் உள்பக்கமாக மேற்கூறையைத் தாங்கிப் பிடிப்பதற்காக இரும்பு ஜாக்கிகள் அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பக்கவாட்டுச் சுவற்றில் கான்கிரீட் அமைக்க வீட்டு உரிமையாளரிடம், ஒப்பந்ததாரர் ரூ. 43,000 பணம் கேட்டதாகப் புகார் எழுந்தது. பணத்தைக் கொடுக்காமல் கான்கிரீட் அமைக்க முடியாது என்று ஒப்பந்ததாரர் கூறியுள்ளார். இந்நிலையில், வீட்டு உரிமையாளர்களான பாலசந்தர்- கோமதி தம்பதி கழிவு நீர் வடிகால் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அதனைப் பொருட்படுத்தாமல் ஒப்பந்ததாரர் அவர்கள்  இருவர் மீதும் கான்கிரீட் சிமெண்ட் கலவையை கொட்டியுள்ளார். இத்தகவல் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியவரவே, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர், தம்பதியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, அவர்களது வீட்டின் பக்கவாட்டிலும் கான்கிரீட் கலவை அமைத்து கழிவுநீர் கால்வாய் கட்டித் தரப்படும் என்று உறுதியளித்தனர். இதன் பிறகு, தம்பதியினர் பள்ளத்தை விட்டு வெளியே வந்தனர். இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பி உள்ளது. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com