'கற்பனைக்கும் எட்டாத தகவல் - ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த சாவர்க்கர் பேரன்

'கற்பனைக்கும் எட்டாத தகவல் - ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த சாவர்க்கர் பேரன்
'கற்பனைக்கும் எட்டாத தகவல் - ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த சாவர்க்கர் பேரன்

சாவர்க்கரும் அவரது ஐந்து- ஆறு நண்பர்களும் சேர்ந்து இஸ்லாமிய நபரை அடித்து மகிழ்ந்தனர்

மோடி என்ற சமூகத்தை இழிவுபடுத்தியதாக நீதிமன்றத்தால் தண்டனைக்கு ஆளான ராகுல் காந்தி மீது, அடுத்த அவதூறு வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கைத் தொடர்ந்திருப்பவர், வி.டி.சாவர்க்கரின் பேரன் சத்யாகி சாவர்க்கர்.
புனே நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு புகார் ஒன்றை அளித்துள்ளார் சத்யாகி அசோக் சாவர்க்கர். இவர் மறைந்த சுதந்திரப் போராட்ட வீரரும் இந்துத்துவாவை கட்டமைத்த விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பேரன் ஆவார். 
சத்யாகி சாவர்கர் புனேவிலும் மகாராஷ்டிராவிலும் இந்துத்துவா இயக்க செயல்பாடுகளில் மூலம் பிரபலமானவர். மென்பொருள் பொறியாளரான சத்யாகி, தகவல் தொழில்நுட்பத் துறையில் சுமார் 19 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.  40 வயதான அவர் தற்போது பலேவாடியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
ராகுல் காந்திக்கு எதிராக சத்யாகி கொடுத்துள்ள அவதூறு புகாரில், ' இங்கிலாந்து பயணத்தின் போது நடந்த ஒரு நிகழ்ச்சியில் சாவர்க்கருக்கு எதிராக ராகுல் காந்தி தவறான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில், ’விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார், அதில் சாவர்க்கரும் அவரது ஐந்து- ஆறு நண்பர்களும் சேர்ந்து இஸ்லாமிய நபரை அடித்து மகிழ்ந்தனர்' எனக் கூறியுள்ளார். இது கோழைத்தனமான செயல் இல்லையா?’ என்று ராகுல் காந்தி பேசினார். இது கற்பனைக்கும் எட்டாத தகவல். அடிப்படை ஆதரமில்லாமல் இதுபோன்று ராகுல் காந்தி பேசி எங்களைப் புண்படுத்தியுள்ளார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'ராகுல் காந்தி சொல்வது போல் உண்மையில் சாவர்க்கர் அப்படிப்பட்ட புத்தகம் எதையும் எழுதவில்லை. ஆகையால், ராகுல் காந்திக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500 (அவதூறு செய்ததற்கான தண்டனை) கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கோரியுள்ளார்.
மோடி குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு, தனது எம்.பி., பதவியை இழந்துள்ளார் ராகுல் காந்தி. இந்நிலையியில், சாவர்க்கரை இழிவுபடுத்தியதாகக் கூறி ராகுல் காந்தி மீண்டும் ஒரு அவதூறு வழக்குப்பதிவு செய்ய மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com