கிருஷ்ணபிரபு இன்று வெளியிட்டு இருந்த தனது ராஜினாமா கடிதத்தில், ‘’ஆருத்ரா போன்ற மோசடியில் ஈடுபட்ட நபர்கள் பா.ஜ.க மாநில தலைமைக்கு மிக நெருக்கமாக இருந்து வருகின்றனர். இதை கண்டும் காணாமல் இருப்பதற்கு என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. என்னை பாஜக பழுது பார்த்து விட்டது. பணம் உள்ளவர்களுக்கு மட்டும் தான் பா.ஜ.க.,வில் பொறுப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு மேல் பா.ஜ.க.,வுக்கு என்னை அர்ப்பணித்தால் உயிருக்கே பாதிப்பு வரும் என நினைத்து நான் ராஜினாமா செய்கிறேன். அடிப்படை உறுப்பினர்களாக இருக்கத் தகுதி இல்லாதவர்களுக்கும் கட்சியில் பொறுப்பு வழங்கப்படுகிறது. கட்சி நிர்வாகிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தால் கட்சி ஒருபோதும் வளராது.