ஆருத்ரா கோல்டு முறைகேடு விவகாரம்: தமிழக பா.ஜ.க பொருளாதாரப் பிரிவு செயலாளர் ராஜினாமா

ஆருத்ரா கோல்டு முறைகேடு விவகாரம்: தமிழக பா.ஜ.க பொருளாதாரப் பிரிவு செயலாளர் ராஜினாமா
ஆருத்ரா கோல்டு முறைகேடு விவகாரம்: தமிழக பா.ஜ.க பொருளாதாரப் பிரிவு செயலாளர் ராஜினாமா

தகுதி இல்லாத சிலரை அண்ணாமலையும், கேசவ விநாயகமும் பொறுப்பில் அமர்த்தி அழகு பார்க்குறீர்கள்.

கட்சி நிர்வாகிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தால் கட்சி ஒருபோதும் வளராது என குற்றம்சாட்டியுள்ள பா.ஜ.க மாநில பொருளாதார பிரிவு செயலாளர் கிருஷ்ண பிரபு ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ‘’ஆருத்ரா போன்ற மோசடியில் ஈடுபட்ட நபர்கள் பா.ஜ.க மாநில தலைமைக்கு மிக நெருக்கமாக இருந்து வருகின்றனர். இதை கண்டும் காணாமல் இருப்பதற்கு என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. என்னை பாஜக பழுது பார்த்து விட்டது.  பணம் உள்ளவர்களுக்கு மட்டும் தான் பாஜகவில் பொறுப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு மேல் பாஜகவுக்கு என்னை அர்ப்பணித்தால் உயிருக்கே பாதிப்பு வரும் என நினைத்து நான் ராஜினாமா செய்கிறேன். அடிப்படை உறுப்பினர்களாக இருக்கத் தகுதி இல்லாதவர்களுக்கும் கட்சியில் பொறுப்பு வழங்கப்படுகிறது. கட்சி நிர்வாகிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தால் கட்சி ஒருபோதும் வளராது.

 அடிப்படை உறுப்பினர்களாக இருக்கக்கூட தகுதி இல்லாத சிலரை அண்ணாமலையும், கேசவ விநாயகமும் பொறுப்பில் அமர்த்தி அழகு பார்க்கிறார்கள். பணம் உள்ளவர்களுக்கு  மட்டும்தான் இந்தக் கட்சியில் பொறுப்பு வழங்கப்படுகிறது என்பதே ஊர்ஜிதமான உண்மை. இதற்கு பலவிதமான ஆதாரங்கள் உள்ளன. ’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com