பிரேத பரிசோதனை அறிக்கை குற்றச்சாட்டை மேலும் வெளிச்சம் போட்டுக் காட்டும்
திருடியதாக சந்தேகத்தில் கட்டி வைத்து அடித்தே கொல்லப்பட்ட இளைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம், ஷாஜஹான்பூரில் 32 வயது இளைஞர் ஒருவர் தனது முதலாளியின் உத்தரவின் பேரில் அடித்துக் கொல்லப்பட்டார். மேலும் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு வெளியில் வீசப்பட்டது.
தொழிலதிபர் ஒருவரது மேலாளராக பணிபுரிந்தவர் சிவம் ஜோஹ்ரி. இவர் குறித்து வீடியோ வெளியனது. அந்த வீடியோவில் சிவத்தை கட்டி வைத்து தாக்குகிறார்கள். சிவம் வலியால் துடித்துக் கொண்டிருந்தது பதற வைத்தது. இந்த தாக்குதல் சிவம் மீது திருட்டு சந்தேகம் ஏற்பட்டதால் கட்டி வைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
காவல் துறையினர் கூறுகையில், ’’செவ்வாய்க்கிழமை இரவு மருத்துவமனையில் சிவத்தின் உடல் வீசப்பட்டுக் கிடந்தது. மின்சாரம் தாக்கி இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். போலீஸ் அதிகாரி ஒருவர் மருத்துவமனையில் அந்த உடலைப் பரிசோதித்தபோது, மின்சாரம் தாக்கியதாகக் கூறப்படுவதற்கு முரண்பட்ட காயங்களைக் கவனித்தார். இதனால், அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை தொடங்கியது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 7 ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலதிபர் பங்கிம் சூரியிடம், சிவம் மேலாளராகப் பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது. சமீபத்தில், பங்கிம் சூரியின் வணிக மையத்தில் இருந்த உள்ளாடையின் ஒரு பெட்டி காணாமல் போனது. திருட்டு சந்தேகத்தின் பேரில் போக்குவரத்து ஊழியர்கள் பலர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரில் உரிமையாளர் நீரஜ் குப்தாவும் ஒருவர். கன்ஹியா ஹோசியரி வளாகத்தில் இருந்து ஒரு காரையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். ’’அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வெளி வந்தபின்பு முழுவிவரம் தெரியவரும்’’ என போலீசார் கூறினர்.