குறித்த காலத்தைவிட அதற்கு முன்னதாகவே இலக்கை அடைய இந்திய அரசு செயல்பட்டு வருகிறது
பல்லாவரத்தில் அரசு விழாவில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, எப்போதெல்லாம் தமிழகம் வளர்கிறதோ, அப்போதெல்லாம் இந்தியாவும் வளர்கிறது என்றார்.
தமிழகத்தில் ரூ.5,200 கோடிக்கு புதிய திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இதனைத்தொடர்ந்து, பல்லாவரத்தில் அரசு விழாவில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்பாேது, வணக்கம் தமிழ்நாடு" என்று சொல்லி, தமிழில் உரையை தொடங்கினார்.
நண்பர்களே, தமிழகத்திற்கு வருவது எப்போதும் பெருமைக்குரிய விசயம். அருமையான அனுபவமாக உணர்கிறேன். தமிழகம் மொழி மற்றும் இலக்கியத்தின் மையமாக திகழ்கிறது.
நாட்டில் பல சுதந்திர போராட்ட வீரர்களை உருவாக்கியது தமிழகம் என்றால் அது மிகையல்ல. இது ஒரு வரலாற்று, பெருக்குரிய இடம். தேசபக்தி, தேச ஒற்றுமை, தேசத்தின் மீது அன்பு கொண்ட மக்கள் தமிழக மக்கள்.
இன்னும் சில நாட்களில் தமிழ் புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறக்கும் போகும் புதிய திட்டங்கள் தொடங்கப்பட உள்ளது. புதிய தலைமுறைக்கான கட்டமைப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
சாலை, விமானம் உள்ளிட்ட புதிய திட்டங்கள் புத்தாண்டை கொண்டாடங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும். புதிய ஆற்றல், நம்பிக்கை, எதிர்பார்ப்பு மிக்க நேரம் இது.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியா கட்டமைப்பு துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது. வரவு -செலவு திட்டத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டால் இந்த விவரம் தெரியவரும். கட்டமைப்புத்துறைக்காக மத்திய அரசு 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
ரயில்வேதுறைக்கு கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவாக தற்போது 5 மடங்கு அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது. 6 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கியுள்ளோம். கடந்த 2014ம் ஆண்டு 300 மருத்துவக் கல்லூரி மட்டுமே இருந்தது. தற்போது 660 எண்ணிக்கையில் கல்லூரிகள் உள்ளது. அதேபோல, எய்ம்ஸ் மருத்துவனையின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இது இந்தியாவின் வேகமான வளர்ச்சியை காட்டுகிறது.
நகர்புறங்களைவிட கிராமப்புறங்களில் இணையதள இணைப்புஎண்ணிக்கை மற்றும் பயன்பாடு அதிகரித்துள்ளது. மலிவு விலையில் இணைய சேவை இந்தியாவில் மட்டுமே வழங்கப்படுகிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தைனையில் உலக அளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
தமிழகத்தில், புதிய திட்டங்களால் சென்னை, மதுரை, கோவை நகரங்கள் நேரடியாக பயன்பெறுகிறது. தமிழகத்தில் உள்ள கட்டுமானங்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் தமிழகத்தின் பண்பாட்டை அவை பிரதிபலிக்கின்றன.
கட்டமைப்பு திட்டங்களில் தாமதம் என்ற நிலை கடந்த காலங்களில் இருந்து வந்தது. ஆனால், இது இப்போது அப்படி இல்லை. எல்லாமே உரிய நேரத்தில் நடைபெற்று வருகிறது.
குறித்த காலத்தைவிட அதற்கு முன்னதாகவே இலக்கை அடைய இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் செலுத்தும் வரிப்பணம் முறையாக திட்டங்களுக்கு செலவு செய்யவேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம்.
குறித்த காலத்திற்கு முன்னதாக இலக்கை எட்டும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஜவுளித்திட்டங்களுக்கு உதவும் வகையில் மித்ரா திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றி வருகிறது. பாரத் மாலா திட்டம் மூலம் கிழக்கு கடற்கரைச்சாலைதிட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
ஜவுளி,தொழில் நிறுவனங்களால் கோவை தொழில்களின் சக்தி பீடமாக திகழ்ந்து வருகிறது. வந்தே பாரத் ரயில் சேவை ஜவுளித்துறையின் மையமாக விளங்கி வரும் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய நகரங்களை இணைக்கிறது. எப்போதெல்லாம் தமிழகம் வளர்கிறதோ, அப்போதெல்லாம் இந்தியாவும் வளர்கிறது.