போராட்டத்துக்கு நிதி: 'ஆளுநர் பேசியதில் என்ன தவறு?' - ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் பேட்டி

போராட்டத்துக்கு நிதி: 'ஆளுநர் பேசியதில் என்ன தவறு?' - ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் பேட்டி
போராட்டத்துக்கு நிதி: 'ஆளுநர் பேசியதில் என்ன தவறு?' - ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் பேட்டி

நாங்கள் இருபது ஆண்டுகளாகச் சொல்லி வருவதை ஆளுநர் இப்போது சொல்லி இருக்கிறார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை முடக்கத்தில் வெளிநாட்டு சதி இருக்கிறது என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார். அவரது பேச்சு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராளிகள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் இன்று தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினர். துளசி அறக்கட்டளையைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் பேசும்போது "நாங்கள் 20 ஆண்டுகளாக சொல்லி வருவதைத் தான் ஆளுநர் இப்போது சொல்லி இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்.பி., ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகம் இதே கருத்தை சொல்லி இருக்கிறது. 
தூத்துக்குடியை சேர்ந்த ஒரு ஸ்டெர்லைட் எதிர்ப்பாளருக்கு வெளிநாட்டு நிறுவனத்துடன் தொடர்பு இருப்பதாகவும் சொல்லி இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் வெளிநாட்டைச் சேர்ந்த அதர் மீடியா என்கிற நிறுவனத்தை சேர்ந்த ஒரு குழுவினர் தூத்துக்குடி வந்துள்ளனர். அவர்கள் இங்கு உள்ள ஆலைக்கு எதிரான போராளிகளைச் சந்தித்து பேசி இருக்கிறார்கள். அப்போது பெரிய அளவிலான பண பேரம் நடந்துள்ளது. அதற்கு பிறகு தான் ஆலைக்கு எதிரான போராட்டங்கள் சூடு பிடித்தது.  கடைசியில் துப்பாக்கிச் சூட்டில் போராட்டம் முடிந்தது.
நாங்கள் இருபது ஆண்டுகளாகச் சொல்லி வருவதை ஆளுநர் இப்போது சொல்லி இருக்கிறார். எனவே தூத்துக்குடி வளர்ச்சிக்கு துணையாக இருந்த ஆலையை மூடக் காரணமாக இருந்த போராளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் கூறினார். 
-எஸ்.அண்ணாதுரை 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com