'காங்கிரஸில் இருந்து விலகுவேன் என நினைக்கவில்லை' - பா.ஜ.க-வில் இணைந்த ஆந்திர முன்னாள் முதல்வர்

'காங்கிரஸில் இருந்து விலகுவேன் என நினைக்கவில்லை' - பா.ஜ.க-வில் இணைந்த ஆந்திர முன்னாள் முதல்வர்
'காங்கிரஸில் இருந்து விலகுவேன் என நினைக்கவில்லை' - பா.ஜ.க-வில் இணைந்த ஆந்திர முன்னாள் முதல்வர்

'என் ராஜா மிகவும் புத்திசாலி, அவர் சுயமாக சிந்திக்க மாட்டார்'

ஆந்திரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டி இன்று பா.ஜ.க.,வில் இணைந்தார். கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனிக்குப் பிறகு, தென்னிந்தியாவின் இரண்டாவது முன்னாள் காங்கிரஸ் தலைவர்  பா.ஜ.க.,வுக்கு மாறியுள்ளார். 2014-ல் தெலுங்கானா மாநிலம் உருவாவதற்கு முன்பு பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தின் கடைசி முதலமைச்சராகப் பணியாற்றிய  கிரண்குமார் ரெட்டி. கட்சித் தலைமையுடனான கருத்து வேறுபாடு காரணமாக மார்ச் 2023 -ல் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்தார்.
ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கும், பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பா.ஜ.க.,வில் சேர்ந்துள்ளார் கிரண் ரெட்டி. 
62 வயதான கிரண் குமார் ரெட்டி, ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்ட பிறகு, 2014 ஆம் ஆண்டில் காங்கிரஸில் இருந்து ஒருமுறை ராஜினாமா செய்து, 'ஜெய் சமைக்யந்திரா' என்ற கட்சியைத் தொடங்கினார். இருப்பினும், 2014 தேர்தலில் அவர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டார். பின்னர் 2018-ல் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். ஆனால், நீண்ட காலமாக அரசியலில் செயல்படாமல் இருந்தார்.
ராயலசீமா பகுதியைச் சேர்ந்த ரெட்டி, தனக்கு கணிசமான செல்வாக்கு உள்ள பகுதியில் பா.ஜ.க.,வின் இருப்பை வலுப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் மூன்றாவது மாற்றாக உருவெடுக்க முயற்சிக்கும் பா.ஜ.க.,வால் அவர் ஒரு சாத்தியமான முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம். நேற்று பா.ஜ.க.,வில் இணைந்த அனில் ஆண்டனி, கிரண் குமார் ரெட்டியை கட்சிக்கு வரவேற்றார்.
காங்கிரஸுடன் தனது குடும்பத்தின் 60 ஆண்டுகாலத் தொடர்பை மேற்கோள் காட்டிய ரெட்டி, ‘’தான் கட்சியை விட்டு விலகுவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியினர் அதிகாரத்தை விரும்புகிறார்கள். ஆனால் கடினமாக உழைக்கவோ, எந்தப் பொறுப்பையும் ஏற்கவோ விரும்பவில்லை. காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் சேதமடைந்து வருகிறது. நான் காங்கிரசை விட்டு வெளியேற வேண்டும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை... 'என் ராஜா மிகவும் புத்திசாலி, அவர் சுயமாக சிந்திக்க மாட்டார், யாருடைய ஆலோசனையையும் கேட்க மாட்டார்' என்று ஒரு பழமொழி உள்ளது. அப்படித்தான் இருக்கிறது காங்கிரஸ் தலைமையின் நிலை’’ என்று கிரண் குமார் ரெட்டி கூறினார். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com