'திருச்சி சிவா கருத்தை மதிக்கிறேன், ஆனால்?' - ராகுல் விவகாரத்தில் அனல்பறந்த விவாதம்

'திருச்சி சிவா கருத்தை மதிக்கிறேன், ஆனால்?' - ராகுல் விவகாரத்தில் அனல்பறந்த விவாதம்
'திருச்சி சிவா கருத்தை மதிக்கிறேன், ஆனால்?' - ராகுல் விவகாரத்தில் அனல்பறந்த விவாதம்

நாடாளுமன்ற விதிகள் 238 மற்றும் 238 (1) (2) (5) ஆகிய விதிகளை மீறுவதாக உள்ளது

'நாடாளுமன்ற விதிமுறைகளை சபாநாயகர் ஜெகதீப் தன்கர் முறையாகப் பின்பற்றவேண்டும்'  என திருச்சி சிவா எம்.பி பேசிய பேச்சுக்கள், வைரலாகி வருகின்றன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதியிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றி, கூட்டத் தொடரைத் தொடங்கி வைத்தார். இதனையடுத்து, 2022 -23ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

பின்னர், நாடாளுமன்றத்தில் 2023 -24ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. 

முன்னதாக, 'ராகுல்காந்தியின் தகுதிநீக்கம் விதிமுறைப்படி தவறு' என காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பாயிண்ட் ஆஃப் ஆர்டர் கொடுத்தார். அதனை ஏற்றுக் கொள்ள துணைக் குடியரசுத் தலைவரும் சபாநாயகருமான ஜெகதீப் தன்கர் மறுத்துவிட்டார். இதுதொடர்பாக, மாநிலங்களவையில் நேற்று (ஏப்ரல் 6) விவாதம் நடைபெற்றது. 

இந்த விவாதத்தில், தி.மு.க மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா கலந்து கொண்டு, நாடாளுமன்ற விதிமுறைகள் குறித்த புத்தக்ததை கையில் வைத்துக்கொண்டு பேசினார். அப்போது, குறுக்கிட்ட மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், 'நீங்கள் பேசுவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால், விதிகளின்படி பேசவேண்டும்'  என கேட்டுக்கொண்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட திருச்சி சிவா, 'சபாநாயகர் அவர்களே, நான் இங்கு விதி எண் 258-ஐ குறித்துப் பேச விரும்புகிறேன். சபாநாயகர் அறிவுறுத்தலின்படி, எந்தவொரு உறுப்பினரும், பாயிண்ட் ஆப் ஆர்டர் சமர்ப்பிக்கலாம். ஆனால், அதில் சபாநாயகரின் முடிவே இறுதியானது என்பதையும் நான் நன்கு அறிவேன். அந்த விதிமுறைப்படி இப்போது பேச விரும்புகிறேன்'' என்கிறார். 

தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, '' காங்கிரஸ் தலைவர் ஒருவர், நமது இந்தியாவின் ஜனநாயகம் குறித்து, வெளிநாட்டில் தவறாகப் பேசியதாக, நாடாளுமன்ற மாநிலங்களைத் தலைவர் பியூஸ் கோயல் ஒரு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். 

பியூஸ் கோயல் பேசும் போது, எவர் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை;  சொல்லவில்லை. பொத்தாம் பொதுவாகத்தான் பேசினார். அப்படி இருக்கையில்,  'மன்னிப்புக் கேட்கவேண்டும்' என்று சொல்கிறார். அவர் சொல்வது யாரை, யார் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் விரும்புகிறார்'' எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், ''பியூஸ் கோயலுக்கு எதிராக மல்லிகார்ஜூன கார்கே எழுப்பிய பாயிண்ட் ஆப் ஆர்டரை நீங்கள் ரத்து செய்துள்ளது வருத்தம் அளிக்கிறது. அது நாடாளுமன்ற விதிகள் 238 மற்றும் 238 (1)  (2) (5) ஆகிய விதிகளை மீறுவதாக உள்ளது'' எனக் குறிப்பிட்டு கையில் இருந்த புத்தகத்தை சுட்டிக் காட்டினார்.

இதை ஏற்றுக்கொண்ட  மாநிலங்களைத் தலைவர் ஜெகதீப் தன்கர், ''திருச்சி சிவாவின் கருத்தை நான் மதிக்கிறேன். ஆனால், கார்கே விவகாரத்தை பொறுத்தவரை நாடாளுமன்ற விதிகளை பின்பற்றியே நடவடிக்கை எடுத்துள்ளேன்'' என்று விளக்கம் அளித்தார்.

ஆனால், மாநிலங்களத் தலைவர் ஜெகதீப் தன்கர் விளக்கத்தை ஏற்க மறுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆனாலும், மாநிலங்களைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com