மகளிர் சுயதவிக் குழுக்களை சேர்ந்த 12,000 பெண் தொழில்முனைவோர்களுக்கு மேம்பாட்டுப் பயிற்சிகள்
தமிழகத்தில், தொழில் தொடங்க உச்சவரம்பு ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 43 புதிய திட்டங்களை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்திற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதிலுரை வழங்கினார். மேலும், 43 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலினத்தவர், புத்தொழில் நிதி ரூ.30 கோடியிலிருந்து ரூ.50 கோடியாக உயர்த்தப்படும். தென்னை நார் பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கு 25% மானியம் வழங்கப்படும்.
தருமபுரி மாவட்டத்தில் ரூ.2.25 கோடியில் மாநில அரசு பங்களிப்புடன் ஒரு விசைத்தறி குழுமமும், கோயம்புத்தூரில் ரூ.7.33 கோடியில் பாக்கு மட்டைபொருட்கள் குழுமமும், ரூ.1 கோடியில் வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரத்தில் தேன் பதப்படுத்தும் குழுமமும், வேலூர் மாவட்டம் கரசமங்கலத்தில் மண்பாண்ட குழுமமும், தென்னை நார் பொருட்களின் தரத்தை உறுதிசெய்ய பரிசோதனைக்கூடம் ரூ.4 கோடியில் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டின் புத்தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான வளங்களை உலக அளவில் ஒருங்கிணைக்க துபாயில் புத்தொழில் ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்படும் என்றும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன பொருட்களை சர்வதேச அளவில் சந்தைப்படுத்த மெய்நிகர் கண்காட்சிகள் உருவாக்கப்படும் என்றும்,
இதேபோல, மகளிர் சுயதவிக் குழுக்களை சேர்ந்த 12,000 பெண் தொழில்முனைவோர்களுக்கு ரூ.1.56 கோடியில் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும். மேலும், ரூ.175 கோடியில் தொழில் முனைவோருக்கு உடன் பயன்படத்தக்க அடுக்குமாடி தொழில் வளாகம் கிண்டியில் உருவாக்கப்படும். இதன் மூலம் 2200 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.