அனில் அந்தோணி பா.ஜ.க.வில் இணைந்தது ஏ.கே. அந்தோணி கூறுகையில், ‘’பா.ஜ.க.வில் சேர்வது என்ற அனிலின் முடிவு என்னை புண்படுத்தியுள்ளது. அது ஒரு மிக தவறான முடிவு. ஒற்றுமையும், மத நல்லிணக்கமும் இந்தியாவின் அடித்தளம். 2014-ம் ஆண்டுக்கு பின்னர், மோடி அரசு அதிகாரத்திற்கு வந்ததும், பன்முக தன்மை மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றை திட்டமிட்ட முறையில் நீர்த்து போக செய்து வருகின்றனர். பா.ஜ.க. சீரான தன்மையில் மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளது. பன்முக தன்மையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் கருத்து. அவர்கள் நாட்டின் அரசியல் சாசன மதிப்புகளை அழித்து கொண்டிருக்கின்றனர்’’ என்றும் அவர் கூறியுள்ளார்.