'நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன்' - ஹெச்.ராஜா திடீர் அறிவிப்பு

'நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன்' - ஹெச்.ராஜா திடீர் அறிவிப்பு
'நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன்' - ஹெச்.ராஜா திடீர் அறிவிப்பு

பழனிசாமி ஒன்றாக தேர்தல் நடக்கும் என்று நம்புகிறார். நடந்தால் நல்லது

’தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன். ஆனால், சிவகங்கை தொகுதியில் பாஜகதான் போட்டியிடும்’என தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
பாஜக ஸ்தாபக தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் ஹெச்.ராஜா இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ''எதிர்கட்சிகள் சில நாட்களுக்கு முன் சமூகநீதி மாநாடு ஒன்றை நடத்தியுள்ளனர். உண்மையில் சமூகநீதி என்பதை பாஜக தான் நிறைவேற்றி வருகிறது. பிரதமர் வாஜ்பாய் காலத்தில் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த டாக்டர்.அப்துல்கலாம் ஜனாதிபதியாக்கப்பட்டார்.  இதே போல் பிரதமர் மோடி ஆட்சியில் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த ராமநாத் கோவிந்தும், அவரைத் தொடர்ந்து முதன் முறையாக மலைவாழ் சமூகத்தை சேர்ந்த பெண்மணி ஜனாதிபதியாக உள்ளார்.
பிற்பட்டோர் சமுதாய கமிஷனுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் காங்கிரஸ் கட்சி தரவில்லை. மாறாக பாஜக அரசுதான் அதனை வழங்கியுள்ளது. அம்பேத்கரின் நினைவிடங்கள் உலகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் எதிர்கட்சிகள் எல்லாம் சமூகநீதி கூட்டமைப்பை ஏற்படுத்தியிருப்பது எனக்கு மூன்றாம் பிறை ஶ்ரீதேவியின் நிலைதான் ஞாபகத்திற்கு வருகிறது.
கீழடியில் சினிமா நடிகர் சூர்யா வந்த அன்று அகழாய்வு கூடத்தை பூட்டி வைத்துக் கொண்டு கூத்தடித்து சென்றுள்ளனர். இது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா? திமுகவிடம் 25 கோடி கையூட்டு வாங்கிய முத்தரசன், மோடியைப் பற்றி பேசத்தகுதியற்றவர். தமிழ்நாட்டில் ஆக்டிவ்வான அரசியல் கட்சி பாஜக தான். 
சிவகங்கை தொகுதியின் தற்போதை எம்.பி யாரென, முழு அரசியல்வாதியான எனக்கே மறந்து விட்டது. அதேபோல்தான் மக்களது மனநிலையும் உள்ளது. இதைவிட அந்த எம்.பி-க்கே தனது தொகுதி எது என மறந்து போய் விட்டது. ஏற்கெனவே மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்கள் இணைந்து தான் நடைபெற்றன. அதை இந்திரா காந்தி தான் மாற்றினார். மேலும், மாநில ஆட்சியாளர்களின் ஸ்திரத் தன்மை இன்மையாலும் மாறியது. இனி ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஓராண்டுக்குள் சாத்தியம் இருக்குமா என்பது தெரியவில்லை. பழனிசாமி ஒன்றாக தேர்தல் நடக்கும் என்று நம்புகிறார். நடந்தால் நல்லது'' என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com