வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், நீட்டிப்பு குறித்து தேர்தல் ஆணையம் இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை. வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள், இரட்டைப் பதிவு, இறப்பு வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருத்தல் ஆகியவற்றால் ஏற்படும் குழப்பங்களைப் போக்கும் வகையில் நீண்ட நாள் போராட்டத்துக்குப்பின் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.