'எந்தக் கட்சியும் இந்தளவு வளரவில்லை' - பா.ஜ.க நிறுவன தினவிழாவில் அண்ணாமலை

'எந்தக் கட்சியும் இந்தளவு வளரவில்லை' - பா.ஜ.க நிறுவன தினவிழாவில் அண்ணாமலை
'எந்தக் கட்சியும் இந்தளவு வளரவில்லை' - பா.ஜ.க நிறுவன தினவிழாவில் அண்ணாமலை

உலகிலேயே ‘மிஸ்டு கால்’ மூலமாக உறுப்பினர் சேர்க்கையை அறிமுகப்படுத்திய கட்சி பா.ஜ.க.

பா.ஜ.க., நிறுவன தினத்தை முன்னிட்டு அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை ’மீண்டும் ஒரு முறை பா.ஜ.க ஆட்சி’ என்கிற தலைப்பில் சுவரில் தாமரை சின்னத்தை வரைந்தார்.
பா.ஜ.க.,வின் 44-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பாஜக கொடியை ஏற்றி வைத்துப் பேசினார். அப்போது அவர், “43ஆண்டுகளில் பாஜக பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. தமிழ்நாட்டு பா.ஜ.க உறுப்பினர்கள் எண்ணிக்கை 4 மடங்காக அதிகரித்துள்ளது. பா.ஜ.க.,வில் 365 நாட்களும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க காங்கிரஸ் ஆட்சியின்போது ஒப்பந்தம் நடந்துள்ளது. விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் திட்டத்தை மத்திய பா.ஜ.க அரசு கொண்டுள்ளது. உலகிலேயே ‘மிஸ்டு கால்’ மூலமாக உறுப்பினர் சேர்க்கையை அறிமுகப்படுத்திய கட்சி பா.ஜ.க.
ஏப்ரல்- 14 ஆம் தேதி திமுகவின் முந்தைய காலத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து வெளியிடப்படும். 2ஜி வழக்குகள் குறித்த விசாரணை தோண்டப்படவுள்ளது. ஒரு காலம் வரும். அப்போது நாங்கள் பல மாநிலங்களில் ஆட்சி செய்வோம். பல கடினமான சூழலில் பா.ஜ.க வளர்ந்து வருகிறது. விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்கள் தமிழ்நாட்டில் கொண்டுவரப்படாது. கட்சியை துவங்கும் போது இரண்டு எம்.பி.,க்கள்  மட்டுமே பா.ஜ.க.,விற்கு கிடைத்தது.
நாடாளுமன்றத்தில் பா.ஜ.க எம்.பி.க்,கள் பேசும்போது காங்கிரஸ் எம்.பி.,கள் தொடர்ந்து கேலியம், கிண்டலும் செய்தனர். ஆனால், இன்று அந்த நிலை முற்றிலும் மாறி பா.ஜ.க., 43 ஆம் ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் பாஜகவை ஏற்றுக்கொண்டுள்ளனர். 43 ஆண்டுகளில் எந்த கட்சியும் இந்த அளவுக்கு வளர்ச்சியை கண்டிருக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வரக்கூடிய நாள் தொலைவில் இல்லை. காரணம் மக்களுக்காக பா.ஜ.க சேவை செய்து கொண்டு இருக்கிறது. தொண்டர்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com