’பேரவை தீர்மானத்தால் எந்தப் பயனும் இல்லை’- நிலக்கரி சுரங்க விவகாரம் குறித்து ஹெச்.ராஜா

’பேரவை தீர்மானத்தால் எந்தப் பயனும் இல்லை’- நிலக்கரி சுரங்க விவகாரம் குறித்து ஹெச்.ராஜா
’பேரவை தீர்மானத்தால் எந்தப் பயனும் இல்லை’- நிலக்கரி சுரங்க விவகாரம் குறித்து ஹெச்.ராஜா

கீழடி அருங்காட்சியகத்தில் சூர்யா குடும்பத்தினர் கேக் வெட்டிக் கொண்டாடியதை கண்டிக்கிறேன்

காவரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்துச் சட்டசபையில் இயற்றப்பட்ட தீர்மானத்தால் எந்தப் பயனும் இல்லை என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன நாளை முன்னிட்டு நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். பின்னர் பேசிய அவர், ‘சமூக நீதி ஒற்றுமை மாநாடு மிகப்பெரிய தோல்வியைக் கண்டுள்ளதாகவும், கீழடி அருங்காட்சியகத்தில் பொதுமக்களை வெளியில் நிறுத்தி விட்டு நடிகர் சூர்யா குடும்பத்தினர் கேக் வெட்டிக் கொண்டாடியதை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலிருந்து நல்ல எண்ணிக்கையில் மோடியை ஆதரிப்பவர்கள் செல்வார்கள் என்ன நம்பிக்கை தெரிவித்தார்.தமிழகத்தில் செயல்படும் கட்சியாகப் பாஜக திகழ்கிறது. அதனால் காவரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது குறித்துச் சட்டசபையில் இயற்றப்பட்ட தீர்மானத்தால் எந்தப் பயனும் இல்லை. பா.ஜ.க அனைத்தையும் பார்த்துக் கொள்ளும் என்றவர், ஸ்டாலின் என்ன குட்டிக்கரணம் போட்டாலும், மத்திய அரசு அதனைச் செய்யும் என்றார்.

தமிழக அமைச்சர்கள் மீது அண்ணாமலை வரும் 14ஆம் தேதி ஊழல் பட்டியலை வெளியிடுவார். அதன் பிறகு தமிழக அரசியலில் பெரும் மாற்றம் நிகழும் என்று கணித்த எச்.ராஜா, தமிழகத்தில் இருக்கும் ஷிண்டேக்களால் இந்த ஆட்சியின் காலம் எவ்வளவு நாள் என்பதைப் பார்ப்போம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தல் நடைபெற அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். அதை நிறைவேற்ற குறைந்த கால அவகாசங்களே உள்ளன என எச்.ராஜா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com