சபாநாயகர் அப்பாவுவை ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் பாராட்டி பேசினார்
சபாநாயகர் அப்பாவு சில சமயம் கனிவாகவும், சில சமயம் கண்டிப்பாகவும் இருக்கிறார் என ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் பாராட்டி பேசினார்.
தமிழ்நாடு சட்டசபையில் கடந்த கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டும், 21ம் தேதி வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து துறை ரீதியான மானியக்கோரிக்கையின் மீது அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது தனக்குப் பேச வாய்ப்பு தரவில்லை எனப் பண்ருட்டி எம்.எல்.ஏவும், தமிழக வாழ்வுரிகை கட்சித் தலைவருமான வேல்முருகன் குரல் எழுப்பினார்.
அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, சட்டமன்றத்தில் இப்படியெல்லாம் பெரிய சத்தம் எழுப்பக்கூடாது என்று கடிந்துக்கொண்டார். மேலும் வேல்முருகனுக்கு கேள்வி கேட்க பலமுறை வாய்ப்புக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
அப்போது எழுந்த ஓ.பன்னீர்செல்வம் தனக்கும் பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என்றார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் பேச அனுமதி அளிக்கப்பட்டது. உபகேள்விகள் எதையும் கேட்காமல் பேசிய ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் அப்பாவு ஆசிரியராக இருந்தார் எனவும் சில சமயத்தில் கனிவானவராகவும், சில சமயங்களில் கண்டிப்பானவராகவும் இருப்பதாக பாராட்டினார்.இதைக்கேட்ட சபாநாயகர், ‘அப்போ நீங்க துணை கேள்வி கேட்க வரவில்லை’ என்று சிரித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்று குறிப்பிட்டுப் பேசுவதற்குப் பதிலாக முன்னாள் முதல்வர் எனப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.