கட்சியின் விதிகளை தனி ஒருவரின் அதிகாரப் பித்துக்காக திருத்துவது, கட்சியை நிறுவிய மக்கள் திலகம் எம்ஜிஆர் சொன்ன மாற்றக் கூடாத விதிகளை மாற்றி தொண்டர்களின் உரிமையை பறிப்பது, பொதுக்குழுவில் கலந்து விட்டு ஒரு முன்னாள் முதலமைச்சரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஒருவர் மீதே தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்க முயற்சிப்பது, தலைமைக் கழகத்திற்கு வரும் போது ஆறு மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் குண்டர்களை வைத்து தாக்குதல் நடத்துவது, காசை வைத்து கட்சியை அபகரிப்பது என ஜனநாயகத்திற்கு எதிரான அரசியலை முன்னெடுத்து தொண்டர்களின் உரிமையை பறிக்கும் எடப்பாடியின் அரசியலை அங்கீகரிப்பதும், ஆக்ரமிப்பு காஷ்மீரை அங்கரீப்பதும் ஒன்று தான் என்பதால் இது போன்ற பட்டப் பகல் அபகரிப்புகளை தடுக்க வேண்டும் என சிவகங்கை மாவட்டக் கழகம் வேண்டுகோளாக முன்வைக்கிறது’’என ஏழு தீர்மானங்களை முன் வைத்துள்ளனர்.