புலம்பெயர் தொழிலாளர் தாக்கப்படுவதாக வீடியோ - பிரசாந்த் உம்ரா மன்னிப்புக் கேட்க உத்தரவு

புலம்பெயர் தொழிலாளர் தாக்கப்படுவதாக வீடியோ - பிரசாந்த் உம்ரா மன்னிப்புக் கேட்க உத்தரவு
புலம்பெயர் தொழிலாளர் தாக்கப்படுவதாக வீடியோ - பிரசாந்த் உம்ரா மன்னிப்புக் கேட்க உத்தரவு

இதுவரை விசாரணைக்கு பிரசாந்த் குமார் உம்ரா ஆஜராகவில்லை.

தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய் வீடியோ பரப்பிய விவகாரத்தில் பா.ஜ.க., செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
அடுத்த புலன் விசாரணைக்கு முன் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் பிரசாந்த் குமார் உம்ராவுக்கு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.  பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க வேண்டும் என பிரசாந்த் குமார் உம்ரா கோரிக்கை விடுத்துள்ளார். 
இதுவரை விசாரணைக்கு பிரசாந்த் குமார் உம்ரா ஆஜராகவில்லை. தமிழ்நாடு காவல்துறை ஏப்ரல் 10-ஆம் தேதி புலன் விசாரணைக்கு ஆஜராக பிரசாந்த் குமார் உம்ராவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக வதந்தி பரப்பிய உத்தரப் பிரதேச மாநில பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ரா மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரை கைது செய்ய டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்திற்கு தனிப்படைகள் அனுப்பி வைக்கப்பட்டன. அதற்குள் அவர் தலைமறைவானதாக கூறப்பட்டது. 
இதற்கிடையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு பிரசாந்த் உம்ரா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தான் இளம் வழக்கறிஞராக இருப்பதால் தனது பணி மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com