பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் பாஜகவில் தன்னை இணைத்து கொள்கிறார்
’பா.ஜ.க.,வுக்கு நடிகர் கிச்சா சுதீப் ஆதரவு கூறியது எனக்கு அதிர்ச்சியும், வேதனையும் அளித்துள்ளது’என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப். இவர் பா.ஜ.க.,வில் இணைகிறார் என்ற தகவல் பொய்யானது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட் செய்திருந்த நிலையில், கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலி பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக கிச்சா கூறியிருக்கிறார்.
வருகிற மே மாதம் 10 ஆம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால், அதற்கு முன்னதாக
பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் பாஜகவில் தன்னை இணைத்து கொள்கிறார் என்று செய்தி வெளியானது. ஆனால், சுதீப் தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகாததால், இந்த செய்தி முழுக்க முழுக்க பாஜகவினரின் தேர்தல் வியூகம் என்று கூறப்பட்டது.
இந்த சூழ்நிலையில், நடிகர் கிச்சா சுதீப் பாஜகவில் இணைந்ததாக வெளியான செய்திக்கு நடிகரும், அவரின் நண்பருமான பிரகாஷ் ராஜ், கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’கர்நாடகாவில் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் பாஜகவினரால் பரப்பப்படும் பொய்யான செய்தி இது. இந்தத் தகவல் பொய்யாக இருக்க வேண்டும். கர்நாடகாவில் பாஜக தோல்வி அடைய வேண்டும்’என்று பிரகாஷ் ராஜ் கூறியிருக்கிறார். பாஜக தான் தேர்தலுக்காக பொய்யான செய்தியை பரப்பி வருகிறதா? என்ற சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடிகர் கிச்சா சுதீப், பாஜகவுக்காக பிரச்சாரம் செய்வேன், ஆனால் சட்டசபை தேர்தல் போட்டியிட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். எனக்கு மிரட்டல் கடிதம் வந்ததாகவும் கூறியுள்ளார். நண்பருக்காக நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட் செய்திருந்த நிலையில், நடிகர் கிச்சா சுதீப், பா.ஜ.க.,வுக்காக பிரச்சாரம் செய்வதாக கூறியிருக்கிறார்.