கர்நாடக சட்டமன்றத் தேர்தல் : 50 பேர் கொண்ட குழுவை அமைத்த பா.ஜ.க.

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் : 50 பேர் கொண்ட குழுவை அமைத்த பா.ஜ.க.
கர்நாடக சட்டமன்றத்  தேர்தல் : 50 பேர்  கொண்ட குழுவை அமைத்த பா.ஜ.க.

மாநில வளர்ச்சிக்கு உதவும் நபர்களை தேர்வு செய்து வேலைகளைப் பகிர்ந்து அளிப்பது என்று முடிவு

கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி, 50 பேர் கொண்ட குழுவை பா.ஜ.க. அமைத்துள்ளது.

கர்நாடகா சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதற்கு முன்னதாக புதிய சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க, தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டியது.

இதனையடுத்து, மார்ச் 29ம் தேதி, டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் மே மாதம் 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மே மாதம் 13 ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து, அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படும். முன்னதாக, ஏப்ரல் 13ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 20ம் தேதி மனுதாக்கல் முடிவு பெறுகிறது. ஏப்ரல் 21ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும் என்று தெரிவித்து இருந்தார்.

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே, பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல, காங்கிரஸ் சார்பில் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா மற்றும் முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பா.ஜ.கவில் உள்ள முக்கியத் தலைவர்கள்  50 பேரை அழைத்து அவசர கூட்டம் நடத்தப்பட்டது. ஆன்லைனில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், கர்நாடகா மாநில தேர்தல் பொறுப்பாளர் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் தலைமை வகித்தனர்.

தேர்தல் பாடத்தில் மிகவும் அனுபவசாலி என்றும், வெற்றிக்கான வியூகம் வகுப்பதில் மிகவும் புகழ் பெற்றவர்கள் என்றும் பெயர் பெற்ற மத்திய நிதி இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, உத்ரபிரதேச எம்.எல்.ஏ. சதீஷ் திவிவேதி, பீகார் எம்.எல்.ஏ. சஞ்சீவ் சவுரசியா, ஆந்திர பிரதேத்தின் சுதாகர் ரெட்டி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரமேஷ் பிதூரி, நிஷிகாந் துபே மற்றும் சஞ்சய் பாட்டியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், மாநில வளர்ச்சிக்கு உதவக்கூடிய முக்கியஸ்தர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கான வேலைகளைப் பகிர்ந்து அளிப்பது என்றும், தேர்தல் வாக்குறுதிகளை அனைத்து வாக்காளர்களிடமும் மிக விரைவாகவும், தெளிவாகவும் கொண்டு செல்லவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com